இது உங்கள் இடம்: மோசம் போய் விடாதீங்க மாணவர்களே!

Added : பிப் 11, 2022 | கருத்துகள் (96) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:மா.மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி, சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாவை, மறுபரிசீலனை செய்யும்படி, திருப்பி அனுப்பினார் கவர்னர் ரவி. அதேநேரத்தில், 'தமிழக அரசு அனுப்பிய, நீட் விலக்கு மசோதா, கிராமப்புற
NEET, anti NEET bill, RN Ravi, Tamil Nadu governor


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


மா.மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி, சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாவை, மறுபரிசீலனை செய்யும்படி, திருப்பி அனுப்பினார் கவர்னர் ரவி. அதேநேரத்தில், 'தமிழக அரசு அனுப்பிய, நீட் விலக்கு மசோதா, கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது' என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.



நீட் தேர்வு ஏன் வேண்டாம் என்பதற்கு, தி.மு.க., அரசு எடுத்து வைத்த வாதங்கள், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு வேட்டு வைப்பது போல இருக்கின்றன. அதனால், இந்த மசோதாவை அப்படியே ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி, பெரும் தவறு செய்ய மாட்டேன் என்றும், மறைமுகமாக சொல்லி விட்டார் கவர்னர் ரவி. இதனால், கொதித்தெழுந்து உள்ளனர் தி.மு.க., தலைவர்கள். கவர்னரை திரும்ப பெற வேண்டும் என, அக்கட்சி எம்.பி.,க்கள், பார்லிமென்டிலும் குரல் கொடுத்துள்ளனர்.



தற்போது நீட் விலக்கு மசோதா சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த மசோதாவை, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு கவர்னர் அனுப்பி வைத்தாலும், உடனே ஜனாதிபதி கையெழுத்து போட்டு விடுவார் என்பது என்ன நிச்சயம்? அவர் மத்திய அரசின் பரிசீலனைக்கு தான் அனுப்பி வைப்பார். இறுதி முடிவு எடுக்க வேண்டியது மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் தான்.


latest tamil news



ஒரு வேளை ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க மறுத்தால், அவரையும் பதவியிலிருந்து நீக்குங்கள் என்று, பார்லிமென்டில் தி.மு.க., - எம்.பி.,க்கள் குரல் கொடுப்பரா என்ன? எல்லாம் வாயை கொடுத்து வம்பில் மாட்டிய கதை தான். 'தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம்' என்று தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்து விட்டு, அதை நிறைவேற்ற தி.மு.க., தலைவர் ஸ்டாலின் படும்பாட்டை பார்க்கும் போது பரிதாபமாகவே இருக்கிறது.



நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில், திராவிட செம்மல்கள், எத்தனை காவடி எடுத்தாலும் வெற்றி பெறவே முடியாது என்பது உறுதி. இனியும், இந்த விஷயத்தில் குளிர்காய நினைக்கும், அரசியல் வியாபாரிகளை நம்பி மோசம் போய் விடாதீர்கள் தமிழக மாணவர்களே. எத்தனை கண்டன கட்டுரைகளை, முரசொலியில் எழுதினாலும், கவர்னர் அதற்கெல்லாம் அசர மாட்டார்!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (96)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
17-பிப்-202208:11:08 IST Report Abuse
சீனி காவிரி ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு எந்த பிரச்சனையும் இல்லை. நீட் தேர்வு வந்தபிறகு மெடிக்கல் சீட்டில் விற்பனை இல்லை. டிஎன்பிஎஸ்சியும், தேசிய தேர்வானையத்து மாற்றிவிட்டால் நீட் மாதிரி ஆதார் மூலமும், செருப்பு முதல் தலைமுடிவரை சோதனை செய்து தேர்வு நடத்துவார்கள், அதே போல் வெளிமநில அதிகாரிகள் இண்டர்வியூ பண்ணினால் பல லட்சம் கொடுத்து வேலைக்கு சேர்ந்து லஞ்சம் வாங்குவதும் குறையும். அதே போல் எல்லா துறை டெண்டர் மற்றும், டாஸ்மாக் பார்கள் எல்லா ஏலத்தையும் தேசிய அளவில் டெண்டர் ஆணையம் அமைத்து, மஞ்சள் பை முதல் அரசு அலுவலகத்துக்கு தேவையான 100ரூபாய் பேப்பருக்கு கூட ஆனலைன் டெண்டர் மூலம் தான் வாங்கவேண்டும் என்ற நிலை வந்தால் எல்லா ஊழலும் ஒழிந்துவிடும். மனில சுயாட்சி என்பது ஒரு குடும்பத்துக்கு மட்டுமே ஊழல் பண்ண வழிவகுக்கும் மாயையாகும். லல்லுவை பாருங்கள் அவர் ஊழல் விஞ்ஞானி இல்லை எனவே 5வ்ழக்குகளில் குற்றவாளியாகிவிட்டார். பிஸ் என்.எல் கேபிள் மூலம் 2000ம்கோடி ஊழல் பண்ணவர்கள், 2G3G புகழ் எல்லாம் பெயிலில் தான் உள்ளனர். ஊழல் ஒழிந்தால் மட்டுமே தமிழகம் வளர்ச்சி அடையும், இல்லன்னா ஒரே குடும்பம் மொத்த காசையும் அள்ளி வைத்துக்கொண்டு, 8 வழிச்சாலையும் வராது, இருக்குற தொழிகளும் முடங்கிவிடும், தமிழர்கள் கூலிகளாக மீண்டும் அண்டை மானிலம், துபாய் போன்ற நாடுகளுக்கு ஓடவேண்டியிருக்கும்.
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
12-பிப்-202200:09:42 IST Report Abuse
Samathuvan படித்த முட்டாளா ? அல்லது படிக்காத அறிவாளியா? யார் வெல்வது. முடிவில் திராவிடம் வெல்லும் என்பதை கூடிய விரைவில் தெரியும் இந்த ஐந்து மாநிலத்தில் மண்ணை கவ்வும் போது.
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
11-பிப்-202221:19:04 IST Report Abuse
Duruvesan அப்போ சூரி moorkan ஹிந்து பெயரில் திரிவது 😂😂😂
Rate this:
RANGAPRASAD - CHENNAI,இந்தியா
12-பிப்-202215:15:18 IST Report Abuse
RANGAPRASADஹா..ஹா ஹா. தமிழர்கள் முதலில் தங்கள் ஹிந்துக்கள் என்று உணரவேண்டும்...
Rate this:
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
14-பிப்-202204:21:50 IST Report Abuse
சாண்டில்யன்,,,,,,...
Rate this:
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
14-பிப்-202204:30:16 IST Report Abuse
சாண்டில்யன்மத்திய பிஜேபி அரசு யாருடன் மல்லுக்கட்டுகிறது தமிழக அரசுடனா தமிழக மாணவர்களுடனா? யார் மீது இந்த வன்மம்? பாதிக்கப் படுவது யார்? இவங்க இங்கே வந்து தமிழில் ரெண்டு வாக்கியங்கள் பேசினால் ஒட்டு பொல பொலவென விழுந்துடுமா? முன்கை நீண்டாதான் முழங்கை நீளும் அதீத மழை வெள்ளம் பாதிப்புக்கு ஒருபைசா பேரலை எந்த முகத்தோடு வரவேக்கப் போகிறார்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X