புதுடில்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட நிதி உதவிகள் குறித்த கேள்விக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது:
கொரோனா தொற்றால் உயிரிழந்த 123 பத்திரிகையாளர்களின் குடும்பத்தினர் மத்திய அரசுக்கு மனு அளித்து இருந்தனர். அந்த மனுக்கள் ஏற்கப்பட்டு, 123 குடும்பத்தினருக்கும், தலா 5 லட்சம் ரூபாய் விதம், 6.15 கோடி ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.