வறுத்தெடுக்கும் பெண்கள்: பிரசாரத்தில் உதயநிதி திணறல்

Updated : பிப் 11, 2022 | Added : பிப் 11, 2022 | கருத்துகள் (69) | |
Advertisement
தஞ்சாவூர் : தஞ்சாவூரில் நேற்று(பிப்.,10) பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதியிடம், 'நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு என்னாச்சு?' என, பெண் ஒருவர் கேள்வி எழுப்பியதால், பரபரப்பு ஏற்பட்டது.தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி, உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், புகளூர் பகுதிகளில் அவர் பிரசாரம்
உதயநிதி, உதயநிதி ஸ்டாலின், திமுக, தி.மு.க., பெண்கள், பிரசாரம், தஞ்சாவூர், அதிர்ச்சி,

தஞ்சாவூர் : தஞ்சாவூரில் நேற்று(பிப்.,10) பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதியிடம், 'நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு என்னாச்சு?' என, பெண் ஒருவர் கேள்வி எழுப்பியதால், பரபரப்பு ஏற்பட்டது.

தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி, உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், புகளூர் பகுதிகளில் அவர் பிரசாரம் செய்தார்.அப்போது சில பெண்கள், 'பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் எப்ப தருவீங்க?' என கேள்வி எழுப்பினர். அதிர்ச்சி அடைந்த உதயநிதி, ''தருவோம்... இன்னும் நாலு வருஷம் இருக்குல்ல...'' என, சமாளித்து சென்றார்.


latest tamil news


இந்நிலையில், தஞ்சாவூரில் நேற்று உதயநிதி பேசுகையில், ''தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், ஏராளமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இன்னும் பல்வேறு வாக்குறுதிகள் அடுத்தடுத்து நிறைவேற்றப்பட உள்ளன,'' என்றார்.

அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு பெண், 'நகை கடன் வாங்கியிருந்தேன்; எனக்கு தள்ளுபடி ஆகவில்லை' என்றார்.

உடனே உதயநிதி, ''எந்த வங்கியில், எத்தனை பேர்ல வச்சீங்க; சீட்டு இருந்தா கொடுங்க,'' எனக் கேட்டார்.அந்தப் பெண், 'சீட்டு எடுத்துட்டு வரல' எனக் கூறியதால், ''என்னம்மா குறை சொல்ற, சீட்ட எடுத்துட்டு வர வேணாமா? உன் பேர் என்ன?'' என, உதயநிதி கேட்க, அந்த பெண், 'தங்கம்' என்றதும், ''தங்கமே கடன் வாங்கியிருக்கு,'' எனக் கூறி சிரித்து, தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.


latest tamil news


உடனே, அப்பெண்ணை தி.மு.க.,வினர் அங்கிருந்து வெளியேற்றினர். அடுத்து, வண்டிக்கார தெருவைச் சேர்ந்த கவிதா என்ற பெண், 'பெற்றோர் இல்லாததால், மூன்று பேரப் பிள்ளைகளை வளர்த்து வருகிறேன். ரொம்ப கஷ்டப்படுறேன். எனக்கு நிதி உதவி செய்ய வேண்டும்' என்றார்.

அதற்கு உதயநிதி, ''எம்.எல்.ஏ.,விடம் கேளுங்க; உதவி கிடைக்கும்,'' எனக் கூறிவிட்டு புறப்பட்டார். போகும் இடங்களில் எல்லாம், தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளை நினைவுபடுத்தி பெண்கள் வறுத்தெடுப்பதால், உதயநிதி அதிர்ச்சியில் உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari - chennai,இந்தியா
17-பிப்-202213:36:51 IST Report Abuse
Hari சென்னையில் ஸ்பென்ஸர் க்கு அடுத்து புகழ் பெட்ர டி வி எஸ் குறுப்பு கம்பெனிக்கு இப்போதான் கழகம் அப்பு சொருகி இடத்தை பிடுங்க போகிறது பல ஆயிரம் கோடி சொத்து அது அதுக்குள்ளே பெண்கள் காசுக்கேட்டால் கிடைக்குமா, இன்னும் சென்னையை ப்படடா போடவேண்டி இருக்கு, அதுக்குள்ளே என்ன அவசரம் இன்னும் வோல்டாஸ் ,கிண்டி ராஜபவனெல்லாம் பாக்கி இருக்கே
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
14-பிப்-202215:41:30 IST Report Abuse
Ram This man asking for recipt, if she gives, they will send their party people to threaten. Good that she did not give
Rate this:
Cancel
Nandhakumar -  ( Posted via: Dinamalar Android App )
12-பிப்-202209:41:55 IST Report Abuse
Nandhakumar அப்படியெல்லாம் 0போகமாட்டான் மக்களே .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X