பூஜ்: குஜராத்தின் பூஜ் பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டதோடு, அவர்களின் 11 படகுகளையும் எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
குஜராத்தின் பூஜ் மாவட்டத்தில் ஹரமி நல்லா பகுதியில் இந்திய பகுதிக்குள் பாகிஸ்தான் படகுகள் அத்துமீறி நுழைவதை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். தொடர்ந்து, அந்த பகுதியில் 300 சதுர கி.மீ., பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதில் 6 பாகிஸ்தான் மீனவர்களையும் ,11 படகுகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை நடந்து வருவதாக எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
