பொருளாதார பாதிப்பிலும் கட்டுக்குள் பணவீக்கம்: நிதியமைச்சர்

Updated : பிப் 12, 2022 | Added : பிப் 12, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுடில்லி : ''கொரோனாவால் நாட்டின் பொருளாதாரம் பின்னடைவை சந்தித்த போதிலும், சில்லரை பணவீக்கத்தை, 6.2 சதவீதம் என்ற அளவில் அரசு கட்டுக்குள் வைத்து உள்ளது,'' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.வேலைவாய்ப்புராஜ்யசபாவில் பட்ஜெட் குறித்த விவாதத்திற்கு பதில் அளித்து நிர்மலா சீதாராமன் பேசியதாவது:நிலையான பொருளாதாரத்தை குறி வைத்து, 2022 - 23ம்

புதுடில்லி : ''கொரோனாவால் நாட்டின் பொருளாதாரம் பின்னடைவை சந்தித்த போதிலும், சில்லரை பணவீக்கத்தை, 6.2 சதவீதம் என்ற அளவில் அரசு கட்டுக்குள் வைத்து உள்ளது,'' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.




latest tamil news


வேலைவாய்ப்புராஜ்யசபாவில் பட்ஜெட் குறித்த விவாதத்திற்கு பதில் அளித்து நிர்மலா சீதாராமன் பேசியதாவது:நிலையான பொருளாதாரத்தை குறி வைத்து, 2022 - 23ம் நிதியாண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2008 - 09ல், அப்போதைய காங்., ஆட்சியில் சர்வதேச பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது.



அந்த சமயத்தில் சில்லரை பணவீக்கம், 9.1 சதவீதமாகவும், பொருளாதார செலவினம், 2.12 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தன.தற்போது, பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில், கொரோனா பரவல் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இருந்தும், அரசு சில்லரை பணவீக்கத்தை, 6.2 சதவீதம் என்ற அளவில் கட்டுக்குள் வைத்துள்ளது.



அதேசமயம், பொருளாதார செலவினம், 9.57 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. பொருளாதாரத்தை ஊக்குவிக்க, அரசின் அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கான மூலதனச் செலவினங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இத்திட்டங்களுக்கு, 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுவதால், வேலைவாய்ப்புஅதிகரிக்கும்.



latest tamil news


இது தவிர, உற்பத்தி அடிப்படையிலான ஊக்கச் சலுகை திட்டம் வாயிலாக, 14 துறைகளில், 60 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும்.முந்தைய காங்., ஆட்சியில், 'மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்' மோசமான நிலையில் இருந்தது. பொய் கணக்குகள் காட்டப்பட்டன. பிறக்காத குழந்தைக்கு கூட இத்திட்டத்தில் பணம் வழங்கப்பட்டது.



தற்போது, இத்திட்டம் தேவையின் அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்காக, 73 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தேவை அதிகமாகும்போது கூடுதல் நிதி வழங்கப்படும். 'கிரிப்டோ கரன்சி'கடந்த, 2014ல், மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்தது முதல், பணவீக்கத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



இதன் காரணமாக ஆறு முறை மட்டுமே சில்லரை பணவீக்கம், 6 சதவீதத்தை தாண்டியுள்ளது.ஏழு ஆண்டுகளுக்கு முன், நாட்டின் பொருளாதார மதிப்பு, 1.10 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, தற்போது, 2.32 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 9.2 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.'கிரிப்டோகரன்சி' எனப்படும் மெய்நிகர் நாணயங்களை தடை செய்வதா, இல்லையா என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்.



கிரிப்டோ கரன்சி சட்டப்பூர்வமானதா, இல்லையா என்பது வேறு விவகாரம். ஆனால், வரி விதிப்பது இந்திய இறையாண்மையின் உரிமை என்பதால், கிரிப்டோகரன்சி வர்த்தகம் வாயிலான வருவாய்க்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். ராகுல் மீது மறைமுக தாக்கு 'மத்திய பட்ஜெட்டில் ஏழைகள், நடுத்தர மக்கள், விவசாயிகளுக்கு எதுவுமே இல்லை' என, காங்., - எம்.பி., ராகுல் தெரிவித்திருந்தார்.



இதற்கு ராகுல் பெயரை குறிப்பிடாமல், நிர்மலா சீதாராமன் ராஜ்யசபாவில் பேசியதாவது:'போதிய உணவு, பணம் அல்லது பொருட்கள் இல்லாததை வறுமை எனக் கூற முடியாது. முன்னேற ஒருவருக்கு தன்னம்பிக்கை இருந்தால் போதும்' என காங்., முன்னாள் தலைவர் ஒருவர் தெரிவித்திருந்தார். அவர் பெயரை நான் கூற மாட்டேன்.



அவர் யார் என்பது இந்த சபைக்கு தெரியும். 'தவளையும் தன் வாயால் கெடும்' என்ற தமிழ் பழமொழியை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்., - எம்.பி.,க் கள் கோஷமிட்டனர். 2013ல், அலகாபாதில் சுய உதவி குழுவினர் இடையே ராகுல் பேசும்போது, 'வறுமை என்பது அவரவர் மனநிலையை பொறுத்தது' எனக் கூறியிருந்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sandru - Chennai,இந்தியா
12-பிப்-202210:27:35 IST Report Abuse
Sandru உங்க தலைவர் மாதிரியே நீங்களும் கலர் கலரா ரீல் சுத்துறீங்க.
Rate this:
Cancel
12-பிப்-202210:14:28 IST Report Abuse
Ambalavanan Gomathinayagam விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைத்திருக்கிறோம் என்பதன் மூலம் விலைவாசி உயர்ந்து கொண்டு இருப்பதை ஓத்து கொள்கிறார்கள்.உயர்வோ, அல்லது கட்டுக்குள்ளோ ஆனால் மக்கள் வாங்கும் சக்தி யை இழந்திருக்கிறார்கள் என்பது மட்டும் மறுக்க இயலாது
Rate this:
Cancel
12-பிப்-202209:46:29 IST Report Abuse
அப்புசாமி 2009 ல ரூபாயின் மதிப்பு அப்போ டாலருக்கு 50 ரூவாயா இருந்திச்சு. இப்போ 75 ரூவாயா நிக்கிதே அம்மணி..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X