இது உங்கள் இடம்: சந்தி சிரிக்கும் கழகத்தின் தமிழ்ப் பற்று!| Dinamalar

இது உங்கள் இடம்: சந்தி சிரிக்கும் கழகத்தின் தமிழ்ப் பற்று!

Updated : பிப் 12, 2022 | Added : பிப் 12, 2022 | கருத்துகள் (65) | |
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்ஆர்.நாராயணசாமி, பாபநாசம், நெல்லை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நீட்' தேர்வு விலக்கு சட்டமசோதாவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக, தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் கடந்த, ௮ம் தேதி நடந்தது. அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், தன் உரையை நிறைவு செய்யும் போது, 'தமிழகம்



உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்



ஆர்.நாராயணசாமி, பாபநாசம், நெல்லை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நீட்' தேர்வு விலக்கு சட்டமசோதாவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக, தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் கடந்த, ௮ம் தேதி நடந்தது. அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், தன் உரையை நிறைவு செய்யும் போது, 'தமிழகம் வாழ்க, தமிழகம் வாழ்க, தமிழகம் வாழ்க' என, மூன்று முறை கூறிய பின், 'நன்றி, வணக்கம்' என்று சொல்லி அமர்ந்துள்ளார்.



latest tamil news



பொதுவாக, கோர்ட்டுகளில், சாட்சிகளை அழைக்கும் போதும், ஏலம் நடக்கும் இடங்களில் ஏலத்தை முடிவுக்கு கொண்டு வரும் போதும் தான், மூன்று முறை சொல்வது வாடிக்கை; வழக்கம்.முதல்வர் ஸ்டாலினும், 'தமிழ் வாழ்க' என்று மூன்று முறை சொல்லி உரையை முடித்திருப்பது, கோர்ட்டையும், ஏலம் நடக்கும் இடத்தையுமே, நமக்கு நினைவூட்டுகிறது.


latest tamil news




தமிழர்களை பற்றி நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை, 'தமிழர் என்றோர் இனமுண்டு! தனியே அவருக்கோர் குணமுண்டு!' என்று பாடி இருக்கிறார். அந்த தனியான குணத்தை, நாம் தி.மு.க., தலைவர் மற்றும் கழக உடன் பிறப்புகளிடம் காண முடியும்.

அதாவது, தமிழ் வாழ வேண்டுமானால், தமிழகம் தலைநிமிர்ந்து நிற்க வேண்டுமானால், தமிழகத்தில் உள்ள கழக உடன்பிறப்புகள் உட்பட அனைவரும், தமிழை பிழையின்றி, எழுதவும், படிக்கவும், பேசவும் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை ஆட்சியில் இருப்போர் எடுக்க வேண்டும்; எடுத்திருக்க வேண்டும்.

அதற்குப் பதிலாக, செயின்ட் ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் மாளிகை மற்றும் அரசு கட்டடங்களின் மீது, 'தமிழ் வாழ்க' என்ற வார்த்தையுடன், நியான் விளக்குகளை பொருத்தி விட்டால், தமிழ் தானாக வாழ்ந்து விடும், வளர்ந்து விடும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.தி.மு.க., உடன்பிறப்புகள் தமிழை வளர்க்கும் முறை குறித்து, ஒரே ஒரு சிறிய உதாரணம் இதோ. 'கழகத் தலைவரே, கர்மவீரரே...!' என்று வர்ணித்து, போஸ்டர் அடிக்க கொடுத்து இருக்கின்றனர்.

அச்சகத்தினரோ, 'காமவீரரே!' என்று அச்சிட்டு கொடுத்து விட்டனர். உண்மையிலேயே தமிழ் மொழி தெரிந்தவராக இருந்திருந்தால், போஸ்டர் அச்சிட கொடுத்த உடன்பிறப்பு, அச்சிட்ட அச்சகத்தை வசைமாரி பொழிந்து விட்டு, போஸ்டர்களை அப்படியே தீ வைத்துக் கொளுத்தி இருப்பார்.

ஆனால், அச்சிட்டவரும் பிழையை கவனிக்கவில்லை; உடன்பிறப்பும் பிழையை பொருட்படுத்தவில்லை. அப்படியே ஊர் முழுதும் ஒட்டி, உளம் மகிழ்ந்து இருக்கின்றனர். இது, ஒரு உதாரணம் தான். இதுபோல ஏராளமான போஸ்டர்கள், நிறைய எழுத்துப் பிழையோடும், பொருள் பிழையோடும், தமிழகம் முழுதும் ஒட்டப்பட்டு சந்தி சிரித்துக் கொண்டிருக்கின்றன.
இதுவே, கழகத்தின் தமிழ் பற்று.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X