முதல்வர் ராஜினாமா செய்ய தயாரா? பன்னீர்செல்வம் கேள்வி!

Updated : பிப் 12, 2022 | Added : பிப் 12, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
தஞ்சாவூர் : ''பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்கள் வழங்கியதற்காக, முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்யத் தயாரா?'' என அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.தஞ்சாவூரில் நேற்று, அ.தி.மு.க., வேட்பாளர்களை அறிமுகம் செய்து, அவர் பேசியதாவது:தமிழகத்தில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாத, மக்கள் விரோத ஆட்சி நடந்து வருகிறது. ஆட்சிக்குதஞ்சாவூர் : ''பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்கள் வழங்கியதற்காக, முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்யத் தயாரா?'' என அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.
latest tamil news


தஞ்சாவூரில் நேற்று, அ.தி.மு.க., வேட்பாளர்களை அறிமுகம் செய்து, அவர் பேசியதாவது:தமிழகத்தில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாத, மக்கள் விரோத ஆட்சி நடந்து வருகிறது. ஆட்சிக்கு வந்து, 10 மாதங்களாகியும் நீட் தேர்வையும், விவசாய கடன், மாணவர்களின் கல்விக் கடனையும் ரத்து செய்யவில்லை.இப்படி மக்களை நம்ப வைத்து ஏமாற்றியுள்ளது.வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக இருப்பதால், லோக்சபா தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் வரும்.பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்களை வழங்கியது, தி.மு.க., ஆட்சியாகத் தான் இருக்கும். இதில், 500 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாக, விசாரணை குழு அறிக்கை தெரிவிக்கிறது.இதற்காக, முதல்வர் பதவியை, ஸ்டாலின் ராஜினாமா செய்யத் தயாரா?latest tamil news


அடுத்து வரும் தேர்தலில், அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும் சாதகமான சூழல் உருவாகி உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.திருச்சியில் அவர் பேசியதாவது:சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வினர் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்ததால், அ.தி.மு.க., தோல்வி அடைந்தது. உள்ளாட்சி தேர்தல், மக்கள் விரோத ஆட்சியை படுதோல்வி அடைய செய்வதற்கு, வாய்ப்பாக அமைந்துள்ளது.தி.மு.க.,வின் வாய் சவடால் பேச்சால், பகல் வேஷம் கலைந்து விட்டது. பகட்டு அரசியல், விளம்பர அரசியல் செய்து, ஆட்சியை பிடித்த தி.மு.க.,வின் முகமுடி கிழிந்துள்ளது. முழுதுமாக கிழிக்க, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த தேர்தலில், தி.மு.க.,வுக்கு மரண அடி விழும்.இவ்வாறு அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sangikikaluku Sangu Oothupavan - THENI,இந்தியா
12-பிப்-202214:01:02 IST Report Abuse
Sangikikaluku Sangu Oothupavan ////
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
12-பிப்-202210:39:40 IST Report Abuse
duruvasar மவுத் புளித்ததோ, மேங்கோ புளித்ததோ என பேசக்கூடாது. 10 வருட பட்டினி பட்டுன்னு போகாது. இப்பத்தான் சாம்பார் வந்திருக்கு. இன்னும் கார் குழம்பு, மோர்க்குழம்பு, ரசம், பாயசம், இரண்டு வகை இனிப்பு, தயிர், பழம். இருக்கு பிறகு ஃபூருட் சாலட், ஐஸ் கிரீம், பீடா என சாப்பிடஏகப்பட்ட ஐட்டங்கள் இருக்கிறது.
Rate this:
John Miller - Hamilton,பெர்முடா
13-பிப்-202202:57:19 IST Report Abuse
John Millerசாப்பாடு அனைத்தையம் செய்தவர் நம் பிரதமர் மோடி....
Rate this:
Cancel
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
12-பிப்-202210:11:25 IST Report Abuse
RaajaRaja Cholan இப்படி மாத்தி மாத்தி ராஜினாமா செய்ய தயாரா என்று கேட்க மட்டும் தான் எல்லா கட்சிக்கும் தெரியும் , ஒருத்தனும் மக்களை நினைத்து பார்ப்பதில்ல , இவனுங்களுக்கு இவனுங்க காரியம் ஆகணும் , மக்கள் என்ன நினைத்தாய் மாக்கள் என்று நினைத்தாயோ அணைத்து கட்சி காரனுங்களே . டாஸ்மாக் மூடுவதை பற்றி , குறைந்த பட்சம் நெறிமுறை , ரேஷன் படுத்தவாவது முயலலாம் , வளரும் தலைமுறை கையில் கிடைக்காமல் செய்யலாம் , இந்த கட்சி காரனுங்களுக்கு இத்தத்துக்கு எல்லாம் எங்கே நேரம் இருக்கு. எங்க சுருட்டல்லாம் என்பது மட்டும் தான் , இந்த மாக்களுக்கு ஒரு நாள் பணம் கொடுத்து ஏமாற்ற முடியும் வரை , கேடு கேட்ட உலகம் . எந்த அரசியல் வியாதியாவது என் ஆட்சியில் லஞ்சம் அரசு அளவில் இருக்காது என்று கடும் நடவடிக்கை எடுக்காதது ஏன் ?. எல்லாவற்றிலும் கமிஷன் எவென் வந்தாலும் கமிஷன் , நாடு விளங்க வேண்டும் ஆனால் இங்க?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X