டில்லி 'உஷ்ஷ்ஷ்' : தமிழகம் மீது ராகுல் கவனம் ஏன்?

Updated : பிப் 13, 2022 | Added : பிப் 12, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
காங்., முன்னாள் தலைவர் ராகுல், சமீப காலமாக தமிழகம் மீதும், தமிழ் மீதும் அதிக பாசமாக உள்ளார். பார்லி.,யில் தமிழகம் குறித்து பேசியது மட்டுமல்லாமல், 'நானும் தமிழன் தான்' என ஒரு போடு போட்டார். தமிழகம் மட்டுமன்றி, கேரளா மீதும் அதிக ஆர்வம் காட்டுகிறார் ராகுல்.சமீபத்தில் இவருக்கும், இவருடைய சகோதரி பிரியங்காவிற்கும் இடையே ஒரு ஒப்பந்தம் உருவானதாம். அதன்படி வட மாநில
டில்லி உஷ்ஷ்ஷ், தமிழகம், ராகுல், ராகுல்காந்தி, காங்கிரஸ், பிரதமர், மோடி, நரேந்திர மோடி,  பாஜ, தமிழ், தேசிய தலைவர்கள்,

காங்., முன்னாள் தலைவர் ராகுல், சமீப காலமாக தமிழகம் மீதும், தமிழ் மீதும் அதிக பாசமாக உள்ளார். பார்லி.,யில் தமிழகம் குறித்து பேசியது மட்டுமல்லாமல், 'நானும் தமிழன் தான்' என ஒரு போடு போட்டார். தமிழகம் மட்டுமன்றி, கேரளா மீதும் அதிக ஆர்வம் காட்டுகிறார் ராகுல்.சமீபத்தில் இவருக்கும், இவருடைய சகோதரி பிரியங்காவிற்கும் இடையே ஒரு ஒப்பந்தம் உருவானதாம். அதன்படி வட மாநில விவகாரங்களை பிரியங்கா கவனித்துக் கொள்வாராம். தென் மாநில காங்., விஷயங்களை ராகுல் பார்த்துக் கொள்வாராம். 'கடந்த லோக்சபா தேர்தலில் உ.பி.,யின் அமேதி தொகுதியில் ராகுல் தோற்ற பின், தனக்கு வட மாநிலங்களில் மதிப்பு இல்லை என்பதை அவர் உணர்ந்து கொண்டார். எனவே தான் தமிழகம், கேரளா என தென் மாநிலங்களில் அவர் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்' என, காங்., தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.'இலங்கையில் நடந்த இனப்படுகொலையில், தமிழர்கள் கொல்லப்பட்ட போது, இந்த தமிழ் பாசம் எங்கே போனது' என்ற விமர்சனங்களும் எழாமல் இல்லை.


தேசிய தலைவர்களின் தமிழ் பிரசாரம்


தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் சூடு பிடித்திருக்கிறது. தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக பிரசாரம் செய்ய, மற்ற கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் களத்தில் இறங்கி பிரசாரம் செய்து வருகின்றனர்.இந்நிலையில், தமிழக காங்கிரசும், பா.ஜ.,வும் இந்த பிரசாரத்தில் தங்கள் தேசிய தலைவர்களை ஈடுபடுத்த உள்ளதாக டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதற்காக, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா தமிழிலேயே பேசும் 30 வினாடி ஓடக்கூடிய 'வீடியோ' தயாராகிறதாம். இதில், 'பா.ஜ.,விற்கு வாக்களியுங்கள்' என நட்டா தமிழில் பேசுகிறார். இதே போல காங்., - -தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக ராகுல் தமிழில் பேசும் வீடியோவும் விரைவில் வருகிறது. இரண்டு தேசிய தலைவர்களும் தமிழ் வாசகங்களை ஹிந்தியில் எழுதி வைத்து படித்துள்ளனராம்.தமிழகத்தில் பா.ஜ., தனித்து போட்டி


உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல்கள் முடிந்த உடன், பா.ஜ., மேலிடம் தமிழகம் மீது தனி கவனம் செலுத்தப் போகிறதாம். இது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் -அமித் ஷா-, தேசிய தலைவர் நட்டா எடுத்த முடிவு என்கின்றனர் பா.ஜ., சீனியர் தலைவர்கள்.'தேர்தல் வந்தால் தமிழகத்தில் தனித்து போட்டியிட வேண்டும்; இரண்டு கழகங்களின் தில்லுமுல்லுகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்; தனித்து போட்டியிட்டால் தான் பா.ஜ., வளரும்; அதற்கு இப்போதிருந்தே தனித்து போட்டியிடுவது தான் நல்லது' என பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது.இந்த விஷயம் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு தெரிவிக்கப்பட்ட பின், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ., தனித்து போட்டியிடும் என அவர் அறிவித்தார். அண்ணாமலை தி.மு.க.,வின் செயல்பாடுகளை ஆதாரங்களுடன் கடுமையாக விமர்சித்து பிரசாரம் செய்வது, பா.ஜ., மேலிட தலைவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.'ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பின், தமிழக அரசியல் மீது தனி கவனம் செலுத்த பிரதமர் தயாராகிவிட்டார்' என்கின்றனர் பா.ஜ., தலைவர்கள்.பிரதமருக்கு உதவிய 40 பேர்


பார்லி., பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, பிரதமர் மோடி, இரு சபைகளிலும் காங்கிரசை கடுமையாக தாக்கிப் பேசினார். மறைந்த காங்., பிரதமர் நேருவில் ஆரம்பித்து, காங்., தலைவர்கள் பலரின் நடவடிக்கைகள் எப்படி மக்களுக்கு எதிராக இருந்தன என்பதை அவர் தகுந்த ஆதாரங்களுடன் சபையில் விளக்கினார்.இதன் பின்னால் பெரும் உழைப்பு உள்ளது என்கின்றனர் விஷயம் தெரிந்தவர்கள். 'காங்கிரசை கடுமையாக விமர்சிக்கப் போகிறேன்; எனவே, அதற்கான விஷயங்களை எனக்கு சேகரித்து கொடுங்கள்' என தனக்கு நெருக்கமான 40 ஆராய்ச்சி உதவியாளர்களிடம் பிரதமர் மோடி கேட்டாராம்.அவர்கள் தயாரித்து கொடுத்த குறிப்புகளை, பேசியதற்கு முதல் நாள் இரவு 2:00 மணி வரை பிரதமர் படித்தார். பின் தானும் சில குறிப்புகளை தயார் செய்து, 28 பக்க பேச்சை இறுதி செய்தாராம்.பிரதமர் தகுந்த ஆதாரங்களோடு காங்கிரசை தாக்கியதால், அக்கட்சி பதிலடி கொடுக்க முடியாமல் திணறியது. ராஜ்ய சபாவில் காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமரை கடுமையாக விமர்சித்தார். ஆனால், பிரதமர் மோடியின் பதில் உரை முடிந்ததும், 'மிகவும் பிரமாதமான பேச்சு' என, அவர் பாராட்டினாராம்.


தமிழக அரசுக்கு கடிவாளம்?


மத்திய அரசின் திட்டங்களை தங்களுடைய திட்டங்கள் என்று தமிழக அரசு, 'ஸ்டிக்கர்' ஒட்டுகிறது' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பிரசாரம் செய்து வருகிறார்.மத்திய அரசின் திட்டங்களுக்காக மாநிலங்களுக்கு தரப்படும் பணத்தை, இனி மாநில அரசுகள் தங்கள் இஷ்டப்படி செலவு செய்யவோ அல்லது ஆளும் கட்சி தலைவர்களின் பெயர்களை சூட்டி மாற்றவோ முடியாதவாறு மத்திய அரசு ஒரு விஷயத்தைச் செய்துள்ளது.அதாவது மத்திய அரசின் திட்டங்களுக்கான மதிப்பீடு, 500 கோடி ரூபாய்க்கு மேல் இருந்தால், மாநில அரசுக்கு நேரடியாக நிதி கிடைக்காது. இந்த நிதியை சம்பந்தப்பட்ட பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம்.பல மாநில அரசுகள், மத்திய அரசின் நிதியை இப்படி தவறாக பயன்படுத்துவதால், இந்த புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது என சொல்லப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
IYER AMBI - mumbai,இந்தியா
21-மார்-202220:02:43 IST Report Abuse
IYER AMBI நேருவின் கைகளில் ஆட்சி வந்தவுடன் காங்கிரஸ் கயவர்களின் கூடாரமாக மாறிப்போனது . இருந்த நல்லவர்களையும் இழந்துவிட்டது . இப்போதைய காங்கிரஸ் தலைவர்கள் ஒன்று ஊழலின் ஊற்றுக்கண்ணாக அல்லது அறிவிலிகளாக இருக்கிறார்கள் . இவர்களால் இனி ஆட்சிக்கு வர முடியாது என்பதே நிதர்சனம் .
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
17-பிப்-202204:55:28 IST Report Abuse
meenakshisundaram தமிழகத்தில் ராகுல் பெயர் நிக்கனும்னா முதல்லே அடிக்கடி தெருக்கடைகலில் டி குடிக்கணும் .மேலும் ஜீன்ஸ் போட்டுக்கிட்டு வயல் வெளியில் பெண்களுடன் போஸ் கொடுக்கோணும் -மேலாக சைக்கிள் ஓட்டணும் .அங்கங்கே கட்சிக்காரனை நிக்க வச்சு (எளிய ,வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மேக் ப்பு உடன்) ஏதாவது பேசுற மாதிரி நடிக்கணும் ? இதெல்லாம் செஞ்ச திமுக உதவியோடு அவங்க சின்னத்தில் போட்டி போட்டு வார்டு கவுன்சிலர் ஆக வாய்ப்புள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X