"இனி நாத்தம்னு சொன்னீங்க... பிச்சுப்புடுவேன் பிச்சு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

"இனி நாத்தம்னு சொன்னீங்க... பிச்சுப்புடுவேன் பிச்சு'

Added : ஜூன் 30, 2010 | கருத்துகள் (1)
Share
நாக்பூர்: பசு மாட்டின் சிறுநீரிலிருந்து (கோமியம்), பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் புதிய மருந்தை நாக்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்; தங்களது புதிய கண்டுபிடிப்புக்கு காப்புரிமையையும் பெற்றுள்ளனர். பசு மாட்டின் சிறுநீரில், மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் மருத்துவக் குணங்கள் நிறைந்திருப்பதை, நாக்பூரைச் சேர்ந்த அனுசந்தன் கேந்திரா கால்நடை ஆராய்ச்சி

நாக்பூர்: பசு மாட்டின் சிறுநீரிலிருந்து (கோமியம்), பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் புதிய மருந்தை நாக்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்; தங்களது புதிய கண்டுபிடிப்புக்கு காப்புரிமையையும் பெற்றுள்ளனர்.


பசு மாட்டின் சிறுநீரில், மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் மருத்துவக் குணங்கள் நிறைந்திருப்பதை, நாக்பூரைச் சேர்ந்த அனுசந்தன் கேந்திரா கால்நடை ஆராய்ச்சி மையமும், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.  ஆர்.சி.யு.டி., முறை எனப்படும் இந்த புதிய கண்டுபிடிப்புக்கு, அமெரிக்கா காப்புரிமை வழங்கியுள்ளது.


தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் தாபன் சக்ரபர்த்தி கூறியதாவது:பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு, பசுவின் சிறுநீரிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்து, சோதனை அடிப்படையில் கொடுக்கப்பட்டதில், நோயாளி நன்கு குணமாகினார். மனிதர்களுக்கு, டி.என்.ஏ., கோளாறால் ஏற்படும் நோய்களை, புதிய மருந்து மூலம் சரி செய்யலாம். நாள்பட்ட தோல் வியாதி, நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்ற  நோய்களை, பசு மாட்டின் சிறுநீர் மூலம் குணப்படுத்தலாம். மருத்துவத் துறையில் இது குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு. பாக்டீரியாவை அழிக்கும் சக்தி கொண்ட வேதிப்பொருள், பசு சிறுநீரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நோய்கள் ஏற்படுவதற்கு, மனித உடலில் உள்ள செல்களில்  வேதிப்பொருள் அதிகரிப்பதே காரணம். பசுவின் சிறுநீர், அந்த வேதிப் பொருட்களைக் கட்டுப்படுத்துகிறது. செல்களின் ஆற்றல் கோபுரங்கள் என்றழைக்கப்படும் மைட்டோகாண்ட்ரியா குறைபாடும், நோய்கள் உண்டாவதற்கு காரணமாகிறது. பசு நீரில் உள்ள வேதிப்பொருள், மைட்டோகாண்ட்ரியாவை அதிகரிக்கச் செய்யும் கிரியா ஊக்கியாகச் செயல்படுகிறது.


தற்போது பசு சிறுநீரில் இருந்து வெளிப்படும் துர்நாற்றத்தை, அதன் வேதித்தன்மை பாதிக்காத வகையில் கட்டுப்படுத்துவது குறித்து ஆய்வு செய்கிறோம். பசு நீரில் செய்த வெவ்வேறு கண்டுபிடிப்புகளுக்காக, தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம், இதுவரை மூன்று காப்புரிமைகளைப் பெற்றுள்ளது.  தற்போதைய கண்டுபிடிப்புக்கு, கடந்த ஆண்டு சீன நிறுவனத்திடமிருந்து காப்புரிமை பெறப்பட்டது. இதுகுறித்த ஆய்வுக் கட்டுரை, சீன அறிவியல் அகடமியின் இதழில் வெளியிடப்பட்டது. இந்த கண்டுபிடிப்புக்கு அமெரிக்க காப்புரிமை பெறுவதற்கு, இரண்டாண்டுகள் ஆனது. கடந்த 2002 மற்றும் 2005ம் ஆண்டுகளில் பசு சிறுநீரில் அனுசந்தன் கேந்திரா கண்டுபிடித்த கிருமி நாசினி மற்றும் புற்றுநோய் மருந்துக்காக, அமெரிக்காவிடமிருந்து இரண்டு காப்புரிமைகள் பெறப்பட்டுள்ளன. இவ்வாறு சக்ரபர்த்தி கூறினார்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X