ஆஸி., கிரிக்கெட் வீரர் திருமணத்துக்கு தமிழில் பத்திரிகை அடித்து அசத்தல்

Added : பிப் 13, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
மெல்பர்ன்:பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல், தமிழ் பெண்ணான வினி ராமனை, மார்ச் 27ம் தேதி திருமணம் செய்ய உள்ளார். இதற்காக தமிழ் மொழியில் அச்சிடப்பட்டுள்ள திருமண பத்திரிகை அனைவரையும் கவர்ந்துள்ளது,நிச்சயதார்த்தம்ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான கிளென் மேக்ஸ்வெல், 31, சில ஆண்டுகளுக்கு முன் இந்திய வம்சாவளியான வினி ராமன், 26, என்ற தமிழ்ப் பெண்ணை
ஆஸி., கிரிக்கெட் வீரர் திருமணத்துக்கு தமிழில் பத்திரிகை அடித்து அசத்தல்

மெல்பர்ன்:பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல், தமிழ் பெண்ணான வினி ராமனை, மார்ச் 27ம் தேதி திருமணம் செய்ய உள்ளார். இதற்காக தமிழ் மொழியில் அச்சிடப்பட்டுள்ள திருமண பத்திரிகை அனைவரையும் கவர்ந்துள்ளது,


நிச்சயதார்த்தம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான கிளென் மேக்ஸ்வெல், 31, சில ஆண்டுகளுக்கு முன் இந்திய வம்சாவளியான வினி ராமன், 26, என்ற தமிழ்ப் பெண்ணை சந்தித்தார். அவர்களுக்கு இடையில் காதல் ஏற்படவே, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.இதையடுத்து 2020ல் இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது நிச்சயதார்த்தம் பாரம்பரிய ஹிந்து முறைப்படி நடந்தது.

அதே ஆண்டு அவர்களது திருமணம் நடக்க இருந்தது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அது தள்ளிவைக்கப்பட்டது.இந்நிலையில் அவர்களது திருமணம் மார்ச் 27ம் தேதி, ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்களின் திருமண பத்திரிகை அனைவரையும் கவர்ந்துள்ளது.


சமூக வலைதளம்


வினி ராமன் தமிழ் பெண் என்பதால், தமிழ் மொழியில் மஞ்சள் நிற திருமண பத்திரிகை அச்சிடப்பட்டுள்ளது. அந்த பத்திரிகை சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Neutral Umpire - Chennai ,இந்தியா
16-பிப்-202213:43:20 IST Report Abuse
Neutral Umpire அக்கிரஹாரத்தில் அன்றாடம் தினசரி வேதம் படித்தவர்கள் ஒரு கால கட்டத்தில் அமெரிக்கா ஐரோப்பா சென்று வாழ்வாதாரத்தை வளப்படுத்தி கொண்டார்கள் ..முந்தைய காலத்தில் இவர்களின் பெண்கள் கலியாணம் செய்து விதவையானால் ரொம்பவே பாதிக்கப்பட்டார்கள் ..காலத்திற்கேற்ப தங்களை மாற்றி முன்னேறுவது பெருமைக்குரிய விஷயம் ..
Rate this:
Cancel
santhanam - செ ன்னை,இந்தியா
16-பிப்-202212:44:50 IST Report Abuse
santhanam கடல் தாண்டி பிரயாணம் செய்யக்கூடாது பழயை பண்பாடு ஆனால் பிரயாணம் செய்தாலும்தன் குல பராம்பரியத்தை விட்டுத்தராமல் அதற்கு மதிப்பளித் அந்த பெண்மையை பாராட்டத்தான் வேண்டும் சாெந்த நாட்டிலேயே தனது குலப்பெருமைகளை சீரழிக்கும் பெண்கள் மத்தியில் இவரது செய்கை பாேற்றுதலுக்குரியது கண்டிப்பாக அந்த பெண் நம் பாரத கலாச்சாரத்துடன் தான் தன் குழந்தைகளை வளா்ப்பாள்
Rate this:
Cancel
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
16-பிப்-202209:36:27 IST Report Abuse
Fastrack ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த பெண்மணி ..மருத்துவ படிப்பு ..அமெரிக்க இளந்தலைமுறைகளும் இப்படி திருமணம் செய்து கொள்கிறார்கள் ..நாலில் ஒருவராக இல்லாத வரை சந்தோஷம் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X