தி.மு.க., போட்ட வழக்கு தான் காரணம்கிறதை மறந்துட்டீங்களா...?

Updated : பிப் 15, 2022 | Added : பிப் 15, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
காங்., கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பேச்சு: தமிழகத்தில் ஆறு ஆண்டுகளுக்குப் பின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வந்துள்ளது. ஐந்து ஆண்டுகளாக அ.தி.மு.க.,வினர், தோல்வி பயம் காரணமாக இத்தேர்தலை நடத்தவில்லை.அ.தி.மு.க., ஆட்சியில உள்ளாட்சி தேர்தல் நடத்தாம போனதுக்கு, உயர் நீதிமன்றத்துல தி.மு.க., போட்ட வழக்கு தான் காரணம்கிறதை, மூத்த வக்கீலான நீங்களே
சிதம்பரம், செல்லமுத்து

காங்., கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பேச்சு: தமிழகத்தில் ஆறு ஆண்டுகளுக்குப் பின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வந்துள்ளது. ஐந்து ஆண்டுகளாக அ.தி.மு.க.,வினர், தோல்வி பயம் காரணமாக இத்தேர்தலை நடத்தவில்லை.


அ.தி.மு.க., ஆட்சியில உள்ளாட்சி தேர்தல் நடத்தாம போனதுக்கு, உயர் நீதிமன்றத்துல தி.மு.க., போட்ட வழக்கு தான் காரணம்கிறதை, மூத்த வக்கீலான நீங்களே மறந்துட்டீங்களா...?உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து அறிக்கை: சத்தியமங்கலம் -- திம்பம் மலைப் பாதையில், வாகனங்களில் அடிபட்டு, வன விலங்குகள் உயிரிழப்பதாக கூறி, இரவு நேர போக்குவரத்துக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது. இப்பகுதி கிராம மக்கள், விவசாயிகள் அத்தியாவசிய தேவைக்கும், காய்கறி விற்பனை செய்யவும் சத்தி, ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர். இரவு நேர தடையால், காலையில் இவ்வழித்தடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும்.


இந்த உலகம், மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல... ஏற்கனவே காடுகளை அழிச்சு, வன விலங்குகளை வேட்டையாடி, நாம மட்டுமே பூமியில வாழணும்னு ஆக்கிட்டோம்... கொஞ்சம், நஞ்சம் இருக்கிற வன விலங்குகளையாவது காப்பாற்ற எடுத்த இந்த முடிவை வரவேற்கலைன்னாலும், எதிர்க்காம இருக்கலாமே...!தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை
: மேற்கு வங்க சட்டசபையை கவர்னர் முடக்கியதாக கூறி, அதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். உண்மை என்ன என்பதை உணராமல், நடைமுறையை புரிந்து கொள்ளாமல், அவசர கோலத்தில் அள்ளி தெளித்த தவறான அறிக்கை. இந்த தவறான தகவலை பதிவிட்டதற்கு, முதல்வர் ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.


latest tamil news
எதிர்க்கட்சி வரிசையில இருக்கிற தங்களை எல்லாம், கவர்னர்களை வச்சு மத்திய பா.ஜ., அரசு பழிவாங்குறதா, 24 மணி நேரமும் ஒரு முதல்வர் சிந்திச்சுட்டே இருந்தா, இப்படித்தான் ஏடாகூடமா நடக்கும்...!அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: தமிழக மீனவர்கள் சமீப காலமாக, இலங்கை கடற்படையால் அடுத்தடுத்து சிறை பிடிக்கப்படுகின்றனர்; அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில், படகுகளை கைப்பற்றி ஏலம் விடுகின்றனர். வெறுமனே கடிதங்ளை எழுதுவதோடு கடமை முடிந்து விட்டதாக, மத்திய, மாநில அரசுகள் நினைப்பது கண்டனத்துக்குரியது.


நீங்க சொல்றது சரிதான்... அதே நேரம், உங்களை போன்ற எதிர்க்கட்சிகளும், 'லெட்டர் பேடு'ல இப்படி ஒரு அறிக்கையை வெளியிடுறதோட, கடமையை முடிச்சுக்கிறதும் கண்டனத்துக்கு உரியது தான்... கடுமையான போராட்டம் நடத்தி, அரசுகளை திரும்பி பார்க்க வைக்கலாமே...!


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
21-பிப்-202216:48:10 IST Report Abuse
M  Ramachandran தினகரன் ஒரு லெட்டர் பேடு கட்சியென்று தெளிவாகா கூறுகிறீர்கள்.இது போனால் சொந்த லாபத்திற்கும் அடித்த கொள்ளையை பணத்தை காப்பாற்றவும் பல புல்லுருவிகள் தமிழ்நாட்டில் முளைத்துள்ளதுவெ இதை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளை என்னவென்பது.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
21-பிப்-202216:40:19 IST Report Abuse
M  Ramachandran பா சி க்கு வயதான படியால் அடிக்கடி உண்மை மறந்து போகும்..சில சமயம் என்ன பேசுகிறோம் முன்பு என்ன பேசினோம் என்று மறந்து விடுகிறது.
Rate this:
Cancel
Mayuram Swaminathan - Chennai,இந்தியா
16-பிப்-202212:19:06 IST Report Abuse
Mayuram Swaminathan சத்தியமங்கலம் பகுதியில் இரவில் போக்குவரத்தை தடை செய்தது மாவட்ட நிர்வாகம் ஹை கோர்ட் அல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X