தமிழக அரசுக்கு எதிராக நாடு முழுதும் போராட்டம்

Added : பிப் 15, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
'தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் நீதி கேட்கும் குரல்களை, தமிழக அரசு ஒடுக்கப் பார்க்கிறது' என, ஏ.பி.வி.பி., குற்றஞ்சாட்டி உள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி, தன்னை மதமாற்றம் செய்ய முயன்றதால், தற்கொலை செய்து கொண்டார் என குற்றச்சாட்டு கிளம்பியது. இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பெரும் புயலை
 தமிழக அரசுக்கு எதிராக நாடு முழுதும் போராட்டம்

'தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் நீதி கேட்கும் குரல்களை, தமிழக அரசு ஒடுக்கப் பார்க்கிறது' என, ஏ.பி.வி.பி., குற்றஞ்சாட்டி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி, தன்னை மதமாற்றம் செய்ய முயன்றதால், தற்கொலை செய்து கொண்டார் என குற்றச்சாட்டு கிளம்பியது. இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பெரும் புயலை கிளப்பியது.
இந்நிலையில் பா.ஜ.,வின் மாணவர் அமைப்பான, ஏ.பி.வி.பி., எனப்படும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தைச் சேர்ந்தவர்கள், நேற்று முன்தினம் தமிழக முதல்வர் ஸ்டாலின் வீடு முன் திடீர் போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை கைது செய்தனர். சென்னையில் நடந்த கைது நடவடிக்கையை கண்டித்து அந்த அமைப்பினர் டில்லி உட்பட நாடு முழுதும் போராட்டம் நடத்தினர்.

டில்லி பழைய தமிழ்நாடு இல்லம் அருகே, அவர்கள் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அப்போது, 'தற்கொலை செய்த மாணவி விவகாரத்தில் நீதியை நிலைநாட்ட வேண்டும்; இதற்கு ஒரே தீர்வு மதமாற்ற தடை சட்டம் கொண்டு வருவது தான்; அதை உடனே செய்ய வேண்டும்' என அவர்கள் வலியுறுத்தினர்.
போராட்டம் காரணமாக அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டுவிடாமலிருக்க தமிழ்நாடு இல்லம் முன், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஇருந்தது.இதே போல சிம்லா, ஜம்மு, கோரக்பூர், போபால் உட்பட நாடு முழுதும் ஏ.பி.வி.பி., அமைப்பினர் தமிழக முதல்வர் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.

- நமது டில்லி நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravi - coimbatore,இந்தியா
21-பிப்-202217:42:48 IST Report Abuse
ravi இந்த திரு தமிழ்நாட்டில் BJP ஒருநாளும் காலூன்ற முடியாது... தமிழ்நாடு மக்கள் எல்லாவற்றையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்.. இதற்கு யார் காரணம் என்று மக்கள் நன்கு அறிவர் ...
Rate this:
Nanda - Villupuram,இந்தியா
22-பிப்-202200:30:52 IST Report Abuse
Nandaஅப்படியா ஏற்கனவே நான்கு சீட் வாங்கிட்டாங்க. இது நாற்பது ஆகும் அப்புறம் 200 ஆகும். தமிழ்நாட்டு மக்கள் விவரம் புரிய ஆரம்பிசிட்டாங்க...
Rate this:
Cancel
Rajakumar - singapore,சிங்கப்பூர்
21-பிப்-202215:21:05 IST Report Abuse
Rajakumar தூத்துகுடி துப்பாக்கி சுட்டு பதிமூணு போரை சுட்டு கொன்றது அரசு, அதிலும் மாணவி இருதங்க அப்ப எங்கேயா..... இருந்திகா......
Rate this:
Cancel
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
21-பிப்-202206:47:28 IST Report Abuse
சாண்டில்யன் ஆதித்த சோழரும் பராந்தக சோழரும் கண்டராதித்தரும் சைவப் பற்று மிக்கவர்கள் எனினும் அவர்கள் பிற மதங்களை த்வேஷிக்கவில்லை தங்கள் ராஜ்யத்தில் வாழும் பிரஜைகள் எந்தெந்த மதத்தை சேர்ந்தவர்களாயினும் அவர்களையும் அவர்களுடைய மதங்களையும் நடுநிலைமை தவறாமல் பராமரித்தார்கள் – கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலிலிருந்து
Rate this:
Neutrallite - Singapore,சிங்கப்பூர்
21-பிப்-202217:26:01 IST Report Abuse
Neutralliteஅப்பயேற்பட்ட நாட்டில் சொந்த மண்ணில் தோன்றிய மதத்தையே எதிர்ப்பதா என்று தானே கேட்கிறீர்கள்?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X