270 அமாவாசை வந்தாலும் பழனிச்சாமி முதல்வராக முடியாது: ப.சிதம்பரம்

Updated : பிப் 16, 2022 | Added : பிப் 16, 2022 | கருத்துகள் (65) | |
Advertisement
தேவகோட்டை : 270 அமாவாசை வந்தாலும் பழனிச்சாமி முதல்வராக முடியாது என முன்னாள் அமைச்சர் சிதம்பரம் கூறினார்.தேவகோட்டை நகராட்சியில் போட்டியிடும் காங்., தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் பிரசாரம் செய்தார். பிரசாரத்தின் போது அவர் பேசுகையில் , தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி நடக்கும் தேர்தல் பிரசார கூட்டத்தில் நின்று கொண்டு பன்னீர் செல்வம்,
P Chidambaram, Congress, AMDK, EPS

தேவகோட்டை : 270 அமாவாசை வந்தாலும் பழனிச்சாமி முதல்வராக முடியாது என முன்னாள் அமைச்சர் சிதம்பரம் கூறினார்.

தேவகோட்டை நகராட்சியில் போட்டியிடும் காங்., தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் பிரசாரம் செய்தார். பிரசாரத்தின் போது அவர் பேசுகையில் , தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி நடக்கும் தேர்தல் பிரசார கூட்டத்தில் நின்று கொண்டு பன்னீர் செல்வம், பழனிச்சாமி வாக்குறுதி நிறைவேற்றவில்லை என பேசுகின்றனர். முன்னாள் முதல்வர்கள் மேடைகளில் தேவையில்லாமல் பிதற்றலாக பேசக் கூடாது.


latest tamil news


சட்டமன்றத்தை முடக்குவோம் என்கின்றனர். சட்டசபையை யாராலும் முடக்க முடியாது. அரசியல் சாசனப்படி முடியாது. கோர்ட் தீர்ப்பு தெளிவாக உள்ளது. 2024 ல் சட்டசபை தேர்தல் வரும் என்றும் 27 அமாவாசையில் தேர்தல் வரும் என பேசுகின்றனர். 27 அமாவாசை வந்தாலும் தேர்தல் வராது. 270 அமாவாசை வந்தாலும் பழனிச்சாமி முதல்வராக முடியாது.

உள்ளாட்சியில் இரண்டு லட்சம் பிரதிநிதிகள் செய்ய வேண்டிய பணிகளை ஒரு மந்திரியால் பார்க்க முடியாது, என்றார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. மாங்குடி தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் ஜோன்ஸ் ரூசோ , முன்னாள் அமைச்சர் தென்னவன் , முன்னாள் நகராட்சி தலைவர் வேலுச்சாமி , திமுக நகர செயலாளர் பாலமுருகன் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
20-பிப்-202201:44:26 IST Report Abuse
DARMHAR இவனுக்கு வேறே வேலை எதுவும் இல்லை. அப்பபோ இந்த மாதிரி தான் எதோ மகா உத்தமன் போல ஊருக்கு உபதேசம் செய்வதே இவனுக்கு தொழிலாக போச்சு ரொம்ப நாள் இருக்கிற இடம் தெரியாமல் ஒளிந்து கொண்டிருந்தான் இந்த ஐ என் எக்ஸ் மீடியா வழக்கின் குற்றவாளி . இவனுக்கு கொஞ்சம் கூட மானம், சூடு, சொரணை இல்லை . .
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
16-பிப்-202214:19:18 IST Report Abuse
Barakat Ali நீங்கள் இருக்கும் காங்கிரசை, காமராஜரை, பக்தவத்சலத்தை திமுக எப்படி நடத்தியது? காங்கிரசுடன் எம்.ஜி.ஆர். எத்தகைய உறவு வைத்திருந்தார்? நினைவிருக்கிறதா?
Rate this:
Cancel
Sathya -  ( Posted via: Dinamalar Android App )
16-பிப்-202214:11:54 IST Report Abuse
Sathya After 1962 Congress never came to power and it will not come back also for power for next generations. PC is not able to understand this at all. For 1 seat they are begging with DMK.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X