சென்னை: தமிழகம் முழுவதும் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்களில், ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவை கோயில்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பு கோயில் நிலங்கள் மீடகப்பட்டு, கோயில்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 991 ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பு செய்வர்கள், உடந்தையாக இருந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கோயிலுக்கு சொந்தமான இடங்கள் அளவீடு செய்யும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Advertisement