சென்னை வளசரவாக்கம் மண்டலம், 150வது வார்டில் தி.மு.க., சார்பில், எம்.எல்.ஏ., கணபதியின் மனைவி ஹேமலதா போட்டியிடுகிறார். இங்கு, அ.தி.மு.க., சார்பில் பகுதி செயலர் கந்தன் என்பவரது மனைவி சுமதி போட்டியிடுகிறார்.
![]()
|
இந்த வார்டில் தி.மு.க., - அ.தி.மு.க., இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருதரப்பினரும் வாக்குறுதிகளை அள்ளி வீசினர்.
'குப்பை இல்லாத, பிளாஸ்டிக் இல்லாத வார்டாக மாற்றுவேன். மாநகராட்சி இடங்களில் மரங்களை நட்டு, ஆக்ஸிஜன் அதிகரிக்கவும், வெப்பநிலையில், 14 சதவீதம் குறைக்கவும் முயற்சி செய்யப்படும்' என, அ.தி.மு.க., வேட்பாளர் சுமதி அளித்த அதிரடி வாக்குறுதி, எதிர்தரப்பினரை மட்டுமின்றி, அப்பகுதி மக்களையும் கிறுகிறுக்க வைத்தது.
![]()
|