இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை

Updated : பிப் 19, 2022 | Added : பிப் 18, 2022 | கருத்துகள் (39) | |
Advertisement
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த எக்கோ, அஹி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்த பாடல்களை அவர் கூறிய ஒப்பந்தத்தை மீறி நான்கு நிறுவனங்கள் பயன்படுத்தியுள்ளதாக கூறி கடந்த 2019ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். அந்த வழக்கை
ChennaiHC, Bans, Ilayaraja, Songs, Without Permission, HighCourt, சென்னை, ஐகோர்ட், உயர்நீதிமன்றம், இளையராஜா, பாடல், தடை

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த எக்கோ, அஹி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்த பாடல்களை அவர் கூறிய ஒப்பந்தத்தை மீறி நான்கு நிறுவனங்கள் பயன்படுத்தியுள்ளதாக கூறி கடந்த 2019ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி எக்கோ, அஹி, யுனிசிஸ், கிரி டிரேடிங் உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்தலாம் என்று உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.



latest tamil news


இந்த வழக்கு இன்று (பிப்.,18) விசாரணைக்கு வந்தபோது, ‛தனி நீதிபதி அளித்த தீர்ப்பால் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், என்னிடம் காப்புரிமை பெறாமல் தன்னுடைய பாடல்களை பயன்படுத்தி வருகிறார்கள். இப்பாடலை படத்தில் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், இதர இணையதளங்களில், பயன்படுத்துவது தவறு என்றும், இது எனக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துவதாகவும்' இளையராஜா தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கில் எக்கோ, அஹி உள்ளிட்ட நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டு மார்ச் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopal Thiyagarajan - Chennai,இந்தியா
25-பிப்-202211:31:05 IST Report Abuse
Gopal Thiyagarajan சினிமா பாடல்களுக்குத்தான் அவ்வப்போது, ஒரு பாடலுக்கு இதனை லட்சம் என்று வாங்கிக்கொள்கிறாரே, சம்பளம் வாங்கிய உடனேயே, அந்த பாடல் தயாரிப்பாளர் சொத்தாக ஆகிவிட்டதல்லவா, அப்புறம் எப்படி இவர் காப்புரிமை பெற முடியும்? இவரெல்லாம் ஒரு பெரிய மகான் என்றெல்லாம் சொல்லிக்கொள்கிறார்கள். இந்த இளையராஜா அந்த நாட்களையெல்லாம் திரும்பி பார்ப்பாரா?
Rate this:
Cancel
Sankaran - chennai,இந்தியா
20-பிப்-202200:47:57 IST Report Abuse
Sankaran சினிமா பாடல் வேறு.. ஆல்பம் வேறு.... இளையராஜா போட்ட ஆல்பத்துக்கு காப்புரிமை வாங்கலாம்...ஆனா சினிமா பாடலுக்கு காப்புரிமை கேட்பது நியாயம் இல்லை...காப்புரிமை தயாரிப்பாளருக்குதான்..
Rate this:
Cancel
19-பிப்-202208:18:56 IST Report Abuse
ஆரூர் ரங் படத்துக்கு இசையமைக்க தயாரிப்பாளர் இடம் காசு வாங்கிக் கொண்டு பிறகு பாடலின் உரிமையை யும் தானே🤔 எடுத்துக் கொள்வது நேர்மையா?.இத்தனைக்கும் ஒலிப்பதிவுக்கூட வாடகை, பாடகர் மற்றும் கருவி இசைப்பவர , ஒலிப்பதிவு பொறியியலாளர் சம்பளம் , போக்குவரத்து படி என எல்லா செலவும் 100 சதவீதம் தயாரிப்பாளருடையது . ஆக முதல் ஒருவரது. காப்புரிமை😛 இன்னொருவருடையது . இது எந்த ஊரு நியாயம்? சாமியார் ராஜா விளக்கவும். ARR க்குப் பிறகு வந்த இசையமைப்பாளர்கள் படத்துக்கு பாடலைப் பயன்படுத்தும் உரிமை மட்டும் தயாரிப்பாளருக்கு என ஒப்பந்தம் போட்டு அதற்கேற்ற ஊதியம் வாங்கிக் கொள்கிறார்கள். அது வேறு விஷயம்)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X