இந்தியா - யு.ஏ.இ., இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

Added : பிப் 18, 2022 | |
Advertisement
புதுடில்லி:இந்தியா - யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே, விரிவான வர்த்தக ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.இந்தியா மற்றும் மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான மாநாடு, 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக நேற்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு எமிரேட்சின் பட்டத்து இளவரசர் முகமது பின் ஜாயத் அல் நாஹ்யான் பங்கேற்றனர். மாநாட்டின் ஒரு

புதுடில்லி:இந்தியா - யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே, விரிவான வர்த்தக ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.


இந்தியா மற்றும் மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான மாநாடு, 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக நேற்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு எமிரேட்சின் பட்டத்து இளவரசர் முகமது பின் ஜாயத் அல் நாஹ்யான் பங்கேற்றனர்.


மாநாட்டின் ஒரு பகுதியாக, இரு நாடுகளுக்கு இடையே விரிவான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல், ஐக்கிய அரபு எமிரேட்சின் பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சர் அப்துல்லா பின் தவுக் அல் மாரி இருவரும் கையெழுத்திட்டனர்.


மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே, வலுவான நட்புறவு உள்ளது. பயங்கரவாதத்தால், இந்தியாவும், ஐக்கிய அரபு எமிரேட்சும் பாதிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதில், இரு நாடுகளும் தோளோடு தோள் இணைந்து நிற்கின்றன.


இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே கையெழுத்தாகியுள்ள விரிவான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுகள், ஆலோசனைகளை, மூன்று மாதத்துக்குள் முடிக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தால், இரு நாடுகளிலும் வர்த்தகம் அதிகரிக்கும். தற்போது இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், ௪.௫ லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது அடுத்த ஐந்து ஆண்டுகளில், ௭.௫ லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்க, இந்த ஒப்பந்தம் பெருமளவில் உதவும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X