பள்ளிக்கு 2.50 ஏக்கர் நிலம் தானம்; முஸ்லிம் குடும்பத்தினர் வழங்கல்| Dinamalar

பள்ளிக்கு 2.50 ஏக்கர் நிலம் தானம்; முஸ்லிம் குடும்பத்தினர் வழங்கல்

Added : பிப் 18, 2022 | கருத்துகள் (2) | |
பெங்களூரு : மைசூரு எச்.டி.கோட்டே மார்ச்சள்ளி கிராமத்தில் வசித்த முகமது ரகிம், பள்ளிக்காக நிலம் வழங்க விரும்பினார். அவரது கனவு நிறைவேறுவதற்குள், அவர் காலமானார். தற்போது அவரது குடும்பத்தினர், 2.50 ஏக்கர் நிலத்தை, அரசு பள்ளிக்காக தானம் செய்துள்ளனர்.இந்நிலம், பச்சேகவுடனஹள்ளியின் அரசு துவக்கப்பள்ளியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் பெயரில் பதிவு
 பள்ளிக்கு 2.50 ஏக்கர் நிலம் தானம்; முஸ்லிம் குடும்பத்தினர் வழங்கல்

பெங்களூரு : மைசூரு எச்.டி.கோட்டே மார்ச்சள்ளி கிராமத்தில் வசித்த முகமது ரகிம், பள்ளிக்காக நிலம் வழங்க விரும்பினார். அவரது கனவு நிறைவேறுவதற்குள், அவர் காலமானார். தற்போது அவரது குடும்பத்தினர், 2.50 ஏக்கர் நிலத்தை, அரசு பள்ளிக்காக தானம் செய்துள்ளனர்.

இந்நிலம், பச்சேகவுடனஹள்ளியின் அரசு துவக்கப்பள்ளியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரகிம் மகன் முகமது ஜாபர் கூறியதாவது:கிராமப்புற சிறார்களின் கல்விக்காக, நிலம் வழங்கினோம். எந்த குழந்தையும். கல்வி பெறுவதிலிருந்து வஞ்சிக்கப்படக்கூடாது. படித்தவர்கள் சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்பது, எங்கள் தந்தையின் கனவு. அதை நாங்கள் நிறைவேற்றினோம்.



நாங்கள் 4 சகோதரர்கள், இரண்டு சகோதரிகள் உள்ளோம். நாங்கள் கலந்தாலோசித்து, 2.50 ஏக்கர் நிலத்தை வழங்க முடிவு செய்தோம். பிப்ரவரி 15ல், பள்ளிக்கு நிலம் பதிவு செய்தோம்.எங்கள் குடும்பம் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளது. 12 ஏக்கருக்கும் அதிகமான நிலம் உள்ளது. நாங்கள் கொடுத்த நிலத்தில், புதிதாக வகுப்பறைகள் கட்டலாம் அல்லது விளையாட்டு மைதானமாக மாற்றலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X