உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்
என்.மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி தி.மு.க., என்று, காலம் காலமாகச் சொல்லப்பட்ட பொய்யை, இன்று சுக்கு நுாறாக உடைத்திருக்கிறோம்' என, வீடியோ பதிவு ஒன்றில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
![]()
|
ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி தி.மு.க., இல்லை என்று ஸ்டாலின் சொல்வது உண்மையானால், அவர் தன் நெற்றியில் திருநீறு, கழுத்தில் ருத்திராட்சம் அணிந்து, அப்படியே சிவப்பழமாக காட்சி அளித்தால், இந்த மகானுபாவர் சொல்வது உண்மை என்று நம்பலாம்.
இவரது ஆட்சியில் தான் எத்தனையோ கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. ஆனால், எந்த கும்பாபிஷேகத்திற்கும், மகன், மருமகள், பேரன் பேத்திகளோடு சென்று, பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்து, அர்ச்சகர் தரும் பிரசாதத்தை வாங்கி தன் பக்தியை வெளிக்காட்டவில்லையே?
இப்படி எதுவுமே செய்யாமல், நாங்கள் ஹிந்து மத விரோதிகள் இல்லை என்று சொன்னால், இவரை எப்படி நம்ப முடியும்? தி.மு.க., ஆட்சியில் தான், 250க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் சுக்கு நுாறாக உடைத்தெறியப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
'ஆக்கிரமிப்பில் இருந்த, 1,789 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலங்களை மீட்டிருக்கிறோம்' என்கிறார் ஸ்டாலின்; நியாயமாகப் பார்த்தால், இது அவரது அரசின் தார்மீகக் கடமை அல்லவா?
![]()
|
கொள்ளை அடிப்பதும், ஒரு அருமையான கலை என்று சொன்னவர், முதல்வரின் அருமைத் தந்தை கருணாநிதி. அப்படி கோவில் சொத்துக்கள் வாயிலாக, தி.மு.க.,வினர் அடித்த கொள்ளைகளுக்கு பரிகாரமாக, இப்போது கோவில் சொத்துக்களை மீட்டிருக்கிறார் என்று சொல்லலாமே தவிர, ஹிந்து மதத்தின் மீது, திராவிடச் செம்மல்கள் வைத்திருக்கும் அளவற்ற ஈடுபாடே காரணம் என்று எப்படி சொல்ல முடியும்?
ஒரு பகுத்தறிவாளர் வீட்டு மருமகளாக இருந்தாலும், ஸ்டாலினின் மனைவி துர்கா, தன் மாமனார் மற்றும் கணவர் சொல்வதையும் மீறி, கோவில் கோவிலாகப் போய் சாமி தரிசனம் செய்து, தன்னை ஒரு உண்மையான ஹிந்து பெண்மணியாக அடையாளம் காட்டி கொண்டுள்ளார்.
அதுபோல, நீங்களும் கோவிலுக்கு போய் சாமி தரிசனம் செய்து, நெற்றியில் திருநீறு பூசுங்கள் ஸ்டாலின். அப்போது நம்புகிறோம் ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல தி.மு.க., என்பதை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement