கோவை: கோவையில் ஒரு கட்சியினர் வாக்காளர்களுக்கு வழங்கிய வெள்ளிக்கொலுசு தரமானது தான் என, மற்றொரு ஆய்வக அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
கோவையில், தேர்தல் பிரசாரத்தின்போது பெண்களுக்கு 'ஹாட் பேக்' பாத்திரங்கள், வெள்ளி கொலுசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
தரமற்றது
![]()
|
இதில், கொலுசின் தரம் குறித்து கேள்வி எழுப்பிய தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தரமற்றது என விமர்சனமும் செய்தார். அதற்கான, தரப்பரிசோதனை மைய சான்றுகளையும் வெளியிட்டார்.தரப்பரிசோதனை அறிக்கையுடன், நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இந்த செய்திக்கு ஆதரவும், எதிர்ப்புமாக எண்ணற்ற தொலைபேசி அழைப்புகள், 'தினமலர்' அலுவலகத்துக்கு நேற்று வந்தன. ஆதரவாக பேசியவர்களில் சிலர், தங்களுக்கு வழங்கப்பட்ட கொலுசுகள் தரமானது தான் என்று கூறி, அதற்கான ஆய்வக சான்றுகளை வெளியிட்டனர்.
அன்பளிப்பு
அவர்கள் கூறுகையில், 'தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், அன்பளிப்புகளை தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ.,வினரும், சில சுயேச்சைகளும் வழங்கியுள்ளனர். ஒரு கட்சியினர் வழங்கிய அன்பளிப்பை மட்டும், ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்துவது சரியல்ல. மற்றொரு கட்சியினர் வழங்கிய பட்டுப்புடவைகளையும் தரப் பரிசோதனைக்கு உட்படுத்தியிருந்தால், பல உண்மைகள் வெளியாகியிருக்கும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE