'ரிலையன்ஸ் கேப்பிட்டல்' நிறுவனம்: திவால் நடவடிக்கை தீவிரம்

Updated : பிப் 19, 2022 | Added : பிப் 19, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுடில்லி: அனில் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த, 'ரிலையன்ஸ் கேப்பிட்டல்' நிறுவனத்தை வாங்குவதற்கான ஏல விருப்பத்தை வழங்குமாறு, ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகி கேட்டுக்கொண்டுஉள்ளார்.அனில் அம்பானியின் குழுமத்தை சேர்ந்த, ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம், வங்கிகளின் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.இதையடுத்து, இந்நிறுவனத்தின்
 ரிலையன்ஸ் கேப்பிட்டல்' நிறுவனம், திவால் நடவடிக்கை

புதுடில்லி: அனில் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த, 'ரிலையன்ஸ் கேப்பிட்டல்' நிறுவனத்தை வாங்குவதற்கான ஏல விருப்பத்தை வழங்குமாறு, ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகி கேட்டுக்கொண்டுஉள்ளார்.
அனில் அம்பானியின் குழுமத்தை சேர்ந்த, ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம், வங்கிகளின் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.இதையடுத்து, இந்நிறுவனத்தின் நிர்வாகிகள் குழுவை, கடந்த ஆண்டு நவம்பரில் ரிசர்வ் வங்கி நீக்கியது. மேலும், திவால் நடவடிக்கையிலும் இறங்கியது.


latest tamil news



தற்போது ஏல விருப்பத்தை தெரிவிப்பதற்கு, மார்ச் 11ம் தேதி கடைசி என்றும், தீர்வு திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு, ஏப்ரல் 20ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது, வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மீது எடுக்கப்படும் மூன்றாவது பெரிய திவால் நடவடிக்கையாகும். இதற்கு முன் ஸ்ரீ குழுமம் மற்றும் திவான் ஹவுசிங் பைனான்ஸ் கார்ப்பரேஷன் ஆகியவற்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின், ஒட்டுமொத்த கடன் 40 ஆயிரம் கோடி ரூபாய்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-பிப்-202216:49:36 IST Report Abuse
ஆரூர் ரங் சரிவுக்கு முன் அனில் அம்பானியின் நிறுவனங்கள் அரசுக்கு பல லட்சம்🙄 கோடி வரியாக கட்டியுள்ளன. நல்ல முறையில் தொழில் நடக்கும் போது பலன் பெற்ற அரசு. சரிவின் போது உதவாவிட்டால் புதிய தொழில் முனைவோர் எப்படி உருவாகுவார்கள்? கடன் வாங்கிய பணத்தை வேறு பணிகளுக்கு திருப்பி விட்டிருந்த புகார் எதுவும் இல்லாதபோது அனில் அம்பானி அவர்களை தூற்றுவது பொருளற்றது. சொந்தத் தொழில் தூக்குபவர்கள் 90 பேர் தோல்விதான் அடைகிறார்கள் அதனாலேயே அவர்கள் குற்றவாளியாக ஆகிவிடுவதில்லை.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
20-பிப்-202211:36:48 IST Report Abuse
S.Baliah Seer அனில் அம்பானி எப்போதோ திவாலாகி விட்டார் என்று தானே செய்திகள் வந்தன.பின் அவருடைய சகோதரர் முகேஷ் அம்பானி கைகொடுத்ததாகவும் தகவல்.பிளாக் மணி ஒயிட் ஆக எத்தனையோ வழிகள்.மீண்டும் இவர்களுடைய பினாமிகள் அதை ஏலத்தில் எடுப்பார்கள்.அண்ணனும் தம்பியும் நாடகம் போடுகிறார்கள்.
Rate this:
Cancel
Sangikikaluku Sangu Oothupavan - THENI,இந்தியா
20-பிப்-202211:25:52 IST Report Abuse
Sangikikaluku Sangu Oothupavan அட நம்ம ரிலையன்ஸ் கம்பெனி தானே 40 ஆயிரம் கோடி ஒன்றிய அரசு மக்கள் தலையில் சரி பண்ணிடும் தோன்டஒர்ரி மக்களே
Rate this:
செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
20-பிப்-202216:45:10 IST Report Abuse
செல்வம்இன்னும் உங்க பிழைப்பு இப்படியே எவ்வளவு நாள் ஓடும்.. குன்றிய அரசு கவிழும் காலம் வெகு தொலைவில் இல்லை.....
Rate this:
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
21-பிப்-202200:00:41 IST Report Abuse
சாண்டில்யன்ரபேல் போர்விமானம் வாங்கியபோது இங்கே பராமரிப்பு தொழிற்சாலை அமைக்க என்று சொல்லி இந்திய அரசு இந்த அனில் அம்பானிக்கு நாற்பதாயிரம் கோடி கொடுத்த கதை சிரித்ததே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X