மம்தா பானர்ஜி பரிந்துரை: திருப்பி அனுப்பினார் கவர்னர்

Updated : பிப் 19, 2022 | Added : பிப் 19, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
கோல்கட்டா: 'சட்டசபை கூட்டத் தொடரை மார்ச் 7ம் தேதி துவக்க வேண்டும்' என்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் பரிந்துரையை அம்மாநில கவர்னர் ஜகதீப் தன்கர் அரசுக்கே திருப்பி அனுப்பினார்.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி , கவர்னர் ஜக்தீப் தன்கர் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜி இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதையடுத்து, மத்திய அரசு கவர்னரை திரும்ப பெற
 மம்தா பானர்ஜி பரிந்துரை:  திருப்பி ,  கவர்னர்

கோல்கட்டா: 'சட்டசபை கூட்டத் தொடரை மார்ச் 7ம் தேதி துவக்க வேண்டும்' என்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் பரிந்துரையை அம்மாநில கவர்னர் ஜகதீப் தன்கர் அரசுக்கே திருப்பி அனுப்பினார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி , கவர்னர் ஜக்தீப் தன்கர் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜி இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதையடுத்து, மத்திய அரசு கவர்னரை திரும்ப பெற வேண்டும் என திரிணமுல் காங்., வலியுறுத்தி வருகிறது.


latest tamil news



இந்நிலையில், மேற்கு வங்க சட்டசபையை பிப்.,12 முதல் முடக்கி வைத்து கவர்னர் ஜக்தீப் தன்கர் உத்தரவிட்டு இருந்தார்.

இதற்கிடையே, மார்ச் 7ல் சட்டசபை கூட்டத் தொடரை துவக்க வேண்டும் என்ற பரிந்துரையை முதல்வர் மம்தா பானர்ஜி, கவர்னருக்கு அனுப்பினார். அதை கவர்னர் ஜகதீப் திருப்பி அனுப்பினார். கவர்னர் ஜக்தீப் கூறுகையில், “மாநில அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் பரிந்துரை செய்யப்பட்டு இருந்ததால், அரசியலமைப்பு சட்டப்படி அதை திருப்பி அனுப்பி விட்டேன்,” என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-பிப்-202216:44:50 IST Report Abuse
ஆரூர் ரங் அவசர நிலை கூட முழு அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் கொண்டு வரப்பட்டது . ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது கையெழுத்திடவில்லையா🤪? இந்திரா மரணத்துக்கு பிறகு காங்கிரஸ் MP க்களின் கூட்டம் நடத்தப்படாமலேயே ராஜிவ் பிரதமராக நியமிக்கப் படவில்லையா? உயிர் பயம் இருந்தால் உடனடியாக மமதா தரும் பிச்சையை வாங்கிக் கொண்டு கையெழுத்து போட்டால் ஆபத்து இல்லை. அநாவசிய மோதல் அர்பன்🤯 நக்சல் தாக்குதலில் விடும். ( தனகர் அவர்களின் துணிவுக்கு பாராட்டுகள், )
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
20-பிப்-202210:39:07 IST Report Abuse
sankaseshan தமிழ்நாட்டுக்கு ரவி மேற்கு வங்கதுக்கு ஜெகதீப்
Rate this:
Cancel
Pandi Muni - Johur,மலேஷியா
20-பிப்-202210:35:51 IST Report Abuse
Pandi Muni அந்நிய கைக்கூலி ஆட்டம் பாட்டம் எல்லாம் குளோஸ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X