கோவையில் ஓட்டுப்பதிவு குறைந்தது எதனால்?

Updated : பிப் 20, 2022 | Added : பிப் 20, 2022 | கருத்துகள் (20) | |
Advertisement
கோவை: கோவை மாநகராட்சியில், 7 லட்சத்து 81 ஆயிரத்து 802 ஆண்கள்; 7 லட்சத்து 83 ஆயிரத்து 56 பெண்கள்; 300 மூன்றாம் பாலினத்தவர் என, 15 லட்சத்து 65 ஆயிரத்து 158 வாக்காளர்கள் உள்ளனர்.இதில், 4 லட்சத்து 21 ஆயிரத்து 164 ஆண்கள்; 4 லட்சத்து 17 ஆயிரத்து 873 பெண்கள்; 72 மூன்றாம் பாலினத்தவர்கள் என, 8 லட்சத்து 39 ஆயிரத்து 109 பேரே ஓட்டளித்துள்ளனர். இது, 53.61சதவீதம்.ஆனால், 2011 தேர்தலில், 59.57 சதவீதத்தினர்


கோவை: கோவை மாநகராட்சியில், 7 லட்சத்து 81 ஆயிரத்து 802 ஆண்கள்; 7 லட்சத்து 83 ஆயிரத்து 56 பெண்கள்; 300 மூன்றாம் பாலினத்தவர் என, 15 லட்சத்து 65 ஆயிரத்து 158 வாக்காளர்கள் உள்ளனர்.




latest tamil news


இதில், 4 லட்சத்து 21 ஆயிரத்து 164 ஆண்கள்; 4 லட்சத்து 17 ஆயிரத்து 873 பெண்கள்; 72 மூன்றாம் பாலினத்தவர்கள் என, 8 லட்சத்து 39 ஆயிரத்து 109 பேரே ஓட்டளித்துள்ளனர். இது, 53.61சதவீதம்.ஆனால், 2011 தேர்தலில், 59.57 சதவீதத்தினர் ஓட்டளித்தனர்.



இதனால், வாக்காளர்கள் ஓட்டுப்போட ஆர்வம் காட்டாதது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது.வார்டு மறுவரையறையில் எல்லை மாற்றப்பட்டு, வீதிகள் பலவும் வெவ்வேறு வார்டுகளில் சேர்க்கப்பட்டிருந்தன. பழைய ஓட்டுச்சாவடிக்கு சென்றவர்களை, 'உங்களுக்கு இந்த பூத் கிடையாது; பக்கத்து பூத்துக்கு போங்க' என, திருப்பி அனுப்பியதால், பெரும்பாலானோர் ஓட்டுப்போடாமல் திரும்பிச் சென்றனர்.



ஏராளமானோருக்கு பூத் சிலிப் கிடைக்கவில்லை. இதுதவிர, வறுமை கோட்டுக்கு கீழ் வசிப்போர் மற்றும் தங்களது ஆதரவாளர்களுக்கு மட்டுமே ஓட்டுக்கு பணம் வழங்கும் நடைமுறையை அரசியல் கட்சியினர் இதுநாள் வரை பின்பற்றினர். இம்முறை ஆயிரக்கணக்கில் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வீடு வீடாக வந்து வழங்கியதை, நடுநிலை வாக்காளர்கள் விரும்பவில்லை.



latest tamil news


இன்னொரு முக்கிய பிரச்னை, வாக்காளர் பட்டியலில், இரட்டை பதிவு அதிகமாக இருந்தது. இறந்த வாக்காளர்கள் நீக்கம் செய்யப்படாமல் உள்ளனர். இடம்பெயர்ந்தவர்களையும் நீக்கியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாத காரணத்தால், மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை மட்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.



100 சதவீதம் தவறில்லாத வாக்காளர் பட்டியல் தயாரித்தால் மட்டுமே, ஓட்டுப்பதிவு விபரங்கள் உண்மையானதாக இருக்கும்..


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-பிப்-202216:15:19 IST Report Abuse
aaranyalingam மக்களவை, சட்டசபை, உள்ளாட்சி இப்படி ஆண்டுக்கு ஒரு தேர்தல். ஒவ்வொறு தேர்தலுக்கும் மக்களை முட்டாள்களாக கருதி வீசப்படும் வெற்று வாக்குறுதிகள். ஐந்தாண்டுக்கு ஒருமுறை ஏமாற்றப் பட்டாலே மக்களுக்கு வாக்களிப்பதில் சோர்வு தட்டும், இதில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தெளிய வைத்து , தெளிய வைத்து ஏமாற்றிக்கொண்டிருந்தால் எப்படி வாக்களிக்க மக்களுக்கு மனம் வரும்?நாட்டு நலனுக்காகவோ, மக்களின் முன்னேற்றத்திற்க்காவோ இந்த தேர்தல்கள் நடத்தபடுவதில்லை. அரசியல் வாதிகளின் அதிகாரத்திற்க்கும் பண வெறிக்காகவும் மட்டுமே இத்தனை தேர்தல்களும் என்று நினைக்கும் நிலைக்கு மக்கள் வர தொடங்கி விட்டார்கள். ஏதோ ஒரு அரசியல் கட்சியையோ அல்லது அரசியல்வாதியையோ மக்களின் பணத்தை கொள்ளையடிக்க வரிசையில் நின்று தேர்ந்தெடுக்க நேரத்தை வீனடிக்க மக்கள் தயாராக இல்லை.5 ஆண்டுகளுக்கு ஒரே தேர்தல், இதுவே எஞ்சியிருக்கும் ஜனநாயகம் காக்கும் ஒரே வழி. சொன்னால் கருப்பு கொடி காட்டுவார்கள்.
Rate this:
Cancel
20-பிப்-202216:15:20 IST Report Abuse
aaranyalingam /////
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
20-பிப்-202215:33:23 IST Report Abuse
Raj பிஜேபி கரனுங்க சேர்த்த வட நாட்டு காரனெல்லாம் UP யில் ஒட்டு போட போயிட்டான்
Rate this:
தமிழ்மணி. கோவன்புத்தூர்.அதனால பங்களாதேஷ் பாகிஸ்தான் வாடிகன் சிட்டிகாரணுக எல்லாம் வந்து திமுக வுக்கு ஒட்டு போட்டுட்டாங்கன்னு சொல்ல வர்றீங்க அப்படித்தானே?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X