வாங்குறவங்க இருக்கிற வரைக்கும் குடுக்கறவங்க, குடுத்துட்டே தான் இருப்பாங்க....!

Updated : பிப் 20, 2022 | Added : பிப் 20, 2022 | கருத்துகள் (21) | |
Advertisement
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை:நகர்ப்புற உள்ளடாட்சிதேர்தலில் பல மாநகராட்சிகளில், பல வேட்பாளர்கள் ஒரு வாக்காளருக்கு 1,000 முதல் 3,000 வரை பம் மற்றும் பரிசுப்பொருட்களை கொடுத்துள்ளனர். தேர்தல் ஆணையத்தின் கைகளை கட்டிப்போட்டு இவர்கள் தேர்லை சந்திக்கின்றனர். தமிழகத்தில், தேர்தல்களில் வெற்றி பெறுவது ஜனநாயகம் அல்ல. மிதஞ்சிய ஊழலும், அதிகார துஷ்பிரயோகம்
கிருஷ்ணசாமி, தினகரன்

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை:நகர்ப்புற உள்ளடாட்சிதேர்தலில் பல மாநகராட்சிகளில், பல வேட்பாளர்கள் ஒரு வாக்காளருக்கு 1,000 முதல் 3,000 வரை பம் மற்றும் பரிசுப்பொருட்களை கொடுத்துள்ளனர். தேர்தல் ஆணையத்தின் கைகளை கட்டிப்போட்டு இவர்கள் தேர்லை சந்திக்கின்றனர். தமிழகத்தில், தேர்தல்களில் வெற்றி பெறுவது ஜனநாயகம் அல்ல. மிதஞ்சிய ஊழலும், அதிகார துஷ்பிரயோகம் ,பொய்யும் புரட்டும் தான் இதை மக்கள் உணர வேண்டும்.


உங்க கூற்றை பார்த்தா, மக்களுக்கு எதுவுமே தெரியாது. அவங்க வெள்ந்திகன்னு சொல்ற மாதிரி தெரியுதே. வாங்குறவங்க இருக்கிற வரைக்கும் குடுக்கறவங்க, குடுத்துட்டே தான் இருப்பாங்க....!



கால்நடைத் தீவன வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலுவுக்கு ஆதரவாக, காங்., பொதுச் செயலர் பிரியங்கா அறிக்கை: பா.ஜ.,வுக்கு தலைவணங்காதவர்கள் எல்லா வகையிலும் துன்புறுத்தப்படுவர் என்பதே, அக்கட்சி அரசியலின் முக்கிய அம்சம். அந்த அரசியல் காரணமாகவே லாலு பிரசாத் தாக்கப்படுகிறார். அவருக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன்.


'போராட்டம் நடத்துறவங்க, குற்றவாளிங்க எல்லாரையும் ஒண்ணா சேர்த்துக்கிட்டு கும்மி அடிக்கிறதே, காங்கிரசின் வேலையா போச்சு'ன்னு எல்லாரும் கிண்டலடிக்கப் போறாங்க!



'அகில இந்திய மஜ்லிஸ் ஏ இதஹதுல் முஸ்லிமீன்' கட்சித் தலைவரான, ஹைதராபாத் எம்.பி., அசாதுதீன் ஒவைசி பேச்சு: உ.பி., முதல்வராக உள்ள, பா.ஜ.,வைச் சேர்ந்த ஆதித்ய நாத்தும், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும், பிரிந்து சென்ற சகோதரர் போன்றவர்கள். இருவருக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை. இருவரும் செருக்குடன், பேரரசர்கள் போன்று நடந்து கொள்பவர்கள்.


உங்க உயரம், 'கெத்து' எல்லாம் அவங்களுக்கு இல்லையே... பேரரசர்கள் போல கம்பீர நடையாவது நடக்கட்டும்... பாவம்...திட்டாதீங்க!



காங்., மூத்த தலைவர் ப.சிதம்பரம் அறிக்கை: வாராது வந்த மாமணி போல் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல்கள் வந்திருக்கின்றன. 2016ம் ஆண்டு நடைபெற வேண்டிய தேர்தலை, அ.தி.மு.க., அரசு நடத்தவில்லை.


ஆறு வருஷமா இந்த 'மாமணி' விவகாரம் உங்க கண்ணுல படாம போச்சே! கண்ணுல பட்டிருந்துதுன்னா, வீதியில இறங்கி போராட்டம் செஞ்சு, 2016லயே தேர்தல் நடத்தி இருப்பீங்க! அந்த, 'மாமணி'யை தான் திட்டணும்!



சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பேச்சு:
உச்சபட்ச வாரிசு அரசியல் நடத்துவதாக, பா.ஜ.,வினர் என்னை குற்றம் சாட்டுகின்றனர். குடும்பமாக வசிப்பவர்களுக்கு தான் குடும்பஸ்தர்களின் வலி தெரியும். குடும்பம் ஏதும் இல்லாதவர்களுக்கு விலைவாசி உயர்வின் கொடூரம் தெரியாது.


அப்பா, சித்தப்பா, அண்ணன், தம்பி, மனைவி, தம்பி மனைவின்னு ஏகப்பட்ட பேரு அரசியல்ல கோலோச்சி, அரசு பதவி வகிக்கிறது ஒண்ணும் தப்பில்லை பிரதர்... அவங்களும் நாலு காசு சேர்த்தா தானே, உங்களை மாதிரி ராஜ வாழ்க்கை வாழ முடியும்!



அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், பிரசாரம் ஓய்ந்ததும், நேற்று முன்தினம் மாலையில் இருந்து, தமிழகம் முழுதும் பணமழை ஆறாக ஓடுவதாக, தகவல்கள் வருகின்றன. மக்களை விலைக்கு வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில், ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில், தி.மு.க., மற்றும் பழனிசாமி கம்பெனிகள், பணத்தை வாரி இறைக்கின்றன. இதை மாநில தேர்தல் ஆணையமும், காவல் துறையும், வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது கண்டனத்திற்குரியது.


latest tamil news




ஒரு எதிர்க்கட்சி தலைவருக்குரிய இலக்கணப்படி அறிக்கை தந்திருக்கீங்க... ஆனா, 20 ரூபாயை டோக்கனா குடுத்து, ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்ல வெற்றியை அறுவடை பண்ணிட்டு, அப்புறம் தொகுதி மக்களுக்கு, 'அல்வா' தந்த, 'பிளாஷ்பேக்'கை நினைச்சு பார்த்தீங்களா?



தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., பேட்டி: கேரளாவிற்கு அடுத்து தமிழகத்தில் அதிக பட்டதாரிகள் உருவாவதற்கு காரணமாக இருந்தவர்கள் சமூக நீதி தலைவர்கள். பிற்படுத்தப்பட்ட மக்களே இல்லை என சொல்லும் அளவிற்கு அந்த சமூகம் வளர்ந்துள்ளது. இருப்பினும், அந்த நிலை தற்போது பறிபோகும் அளவிற்கு வந்துள்ளது என்றால், அதற்கு நீட் தான் காரணம். ஒவ்வொரு தமிழர்களும், நீட் வேண்டாம் என்ற உறுதிமொழியை ஏற்க வேண்டும்.


சில ஆயிரம் பேர் மட்டுமே எழுதுற, 'நீட்' தேர்வால, ஏறத்தாழ 7.50 கோடி மக்கள் தொகை உள்ள தமிழகத்தின் சமூக நீதிக்கு பங்கம் வந்துடும்னு சொல்றதுல, 'லாஜிக்' ஏதாவது இருக்குதா...?



மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத் தலைவர் தங்கவேல் பேட்டி
: தமிழகம் முழுதும் தேர்தல் விதிமீறல்கள் இருந்தாலும், கோவையில் அதிகமான விதிமீறல்கள் நடக்கின்றன. இங்கு தேர்தலை நிறுத்த வேண்டும். ஓட்டுக்கு அ.தி.மு.க., மறைத்து பணம் தருகிறது; தி.மு.க., வெளிப்படையாக தருகிறது. கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


நீங்க சொல்லி, தப்பி தவறி தேர்தலை நிறுத்திட்டா, மக்களுக்கு தான் கொண்டாட்டமா போயிடும்... மறுபடியும், பணம், பரிசு பொருட்கள்னு முன்னை விட அதிகமா கொடுப்பாங்கன்னு எதிர்பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க!



புதுச்சேரி சபாநாயகர் செல்வம் பேட்டி: முதல்வர் ரங்கசாமி அறிவுறுத்தலின்படி, வரும் 28ம் தேதிக்கு பின் அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் கோவா, உத்தரகண்ட், ஜார்க்கண்ட், தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநிலம், பெலகாவியில் உள்ள சட்டசபைகளை ஆய்வு செய்து, புதுச்சேரியில் எப்படிப்பட்ட சட்டசபையை கட்டுவது என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.


இன்றைக்கு இருக்கிற நவீன தகவல் தொழில்நுட்பத்துல, மேற்கண்ட சட்டசபைகளின் மாதிரி வரைபடங்களை அஞ்சே நிமிஷத்துல மொபைல் போன் வழியாவே வாங்கிட முடியும்... ஆனா, மக்களின் வரிப்பணத்துல, ஒரு இன்பச் சுற்றுலா போகணும்னு முடிவு பண்ணிட்டா, உங்களை யாரு தடுக்க முடியும்?


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-பிப்-202200:49:11 IST Report Abuse
அப்புசாமி அதுக்குத்தான் 15 லட்சம் குடுக்கற அளவுக்குன்னு சொல்லி குடுக்காம டபாய்க்கணும். குடும்ப கார்டுக்கு 5000 ம்னுட்டு சைலண்ட்டாயிடணும். இந்த விஷயத்தில் குன்றிய அரசும், விடியா அரசும் ரெட்டைக் குழல் துப்பாக்கிகள்.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
20-பிப்-202218:24:16 IST Report Abuse
vbs manian கிட்டத்தட்ட கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளாக கழகங்கள் மாற்றி மாற்றி ஆட்சி. இன்னும் அவர்களால் சமூக நிதியை நிலை நிறுத்த முடியவிலாய். இந்த ட்ராமா இன்னும் எத்தனை காலம் தொடரும்.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
20-பிப்-202218:21:36 IST Report Abuse
vbs manian தமிழ் நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் வேண்டுமானால் பத்தாம் வகுப்பு மார்க் அடிப்படையில் மாணவர்களை சேருங்கள் அதுவும் ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்தால். மற்ற மாநிலங்களில் படிக்க விரும்பும் மாணவருக்கு நீட் எழுத அனுமதி வசதி தமிழகத்தில் செய்து கொடுக்கப்பட வேண்டும். அவர்கள் உரிமையை தடுக்க முடியாது.நீட் எழுத விரும்புவார்கள் நீட் எழுத அனுமதிக்கப்பட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X