மறு தேர்தல் நடத்த வலியுறுத்தி வழக்கு தொடர பா.ஜ., முடிவு

Updated : பிப் 21, 2022 | Added : பிப் 21, 2022 | கருத்துகள் (49) | |
Advertisement
சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில், கள்ள ஓட்டுக்கள் பதிவானதால், மறு தேர்தல் நடத்தக்கோரி, வழக்கு தொடர தமிழக பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்தல், மாநில தேர்தல் கமிஷனின் நம்பகத்தன்மைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.பா.ஜ., ஓட்டு வங்கி

சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில், கள்ள ஓட்டுக்கள் பதிவானதால், மறு தேர்தல் நடத்தக்கோரி, வழக்கு தொடர தமிழக பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது.



latest tamil news



நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்தல், மாநில தேர்தல் கமிஷனின் நம்பகத்தன்மைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.பா.ஜ., ஓட்டு வங்கி கணிசமாக உள்ள வடசென்னையில், வட மாநிலத்தினர் வசிக்கிற சில பகுதிகளில், அவர்களின் ஓட்டுக்கள் கொத்து, கொத்தாக நீக்கப்பட்டுள்ளன. கடந்த லோக்சபா, சட்டசபை தேர்தலில் ஓட்டு அளித்த குடும்பத்தினர், உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியலில் விடுபட்டது ஆளுங்கட்சியினர் மீது சந்தேகத்தை உருவாக்கி உள்ளது.


latest tamil news


விடுபட்ட வாக்காளர்களின் குமுறலை, வீடியோ வாயிலாக பா.ஜ.,வினர் பதிவு செய்துள்ளனர். மதுரை மாநகராட்சி தேர்தலில், 30, 32, 43, 57, 58, 98 ஆகிய ஆறு வார்டுகளில், ஆளுங்கட்சியினரின் அத்துமீறல் நடவடிக்கை மாவட்ட அளவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கேமரா பொருத்தாததால், வாக்காளர்களை தடுத்து நிறுத்தி விட்டு, ஆளுங்கட்சியினரே கள்ள ஓட்டு போட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

இது குறித்த புகாரை மாவட்ட கலெக்டரிடம் வழங்கிய, மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் கூறுகையில், ''சுதந்திரமாக, நியாயமாக தேர்தல் நடத்த வேண்டும். வாக்காளர்கள் தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும்.''ஆறு வார்டுகளுக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்,'' என்றார்.

கோவை மாநகராட்சியின் சில வார்டுகளில், வாக்காளர்களை ஓட்டு போடவிடாமல், ஆளுங்கட்சியினரை மட்டும் அனுமதித்து, கள்ள ஓட்டுக்களை பதிவு செய்த வீடியோ ஆதாரமும்; ஓட்டுச்சாவடி வாசலில் பணம் வழங்கிய வீடியோ ஆதாரமும் பா.ஜ.,வினரிடம் சிக்கியுள்ளது. ஆளுங்கட்சியினரின் தில்லுமுல்லுகளுக்கு, தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் நிராகரித்தால், மறு தேர்தல் நடத்தும் கோரிக்கையுடன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க பா.ஜ., முடிவு செய்துள்ளது.
- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samathuvan - chennai,இந்தியா
21-பிப்-202214:58:19 IST Report Abuse
Samathuvan 2014 ல ஒன்றிய அரசுதான் இப்படி வந்தது அதைத்தான் நம்ம அண்ணாமலை சொல்றார்.
Rate this:
Cancel
21-பிப்-202214:30:14 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் பெங்களூரு: இந்து இளைஞர் படுகொலையால் கர்நாடகாவின் ஷிவ்மோகாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஷிவ்மோகா மற்றும் பத்ராவதி நகர்களில் 144 தடை உத்தரவு அமலாகியுள்ளது. இதனால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தான் அலையறான்
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
21-பிப்-202214:01:17 IST Report Abuse
Raj பிஜேபி பணம் கொடுத்து ஒட்டு வாங்கிய மூன்ரூ கட்ட UP தேர்தலையும், மறு தேர்தல் நடத்த வலியுறுத்தினல் நன்றாக இருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X