இது உங்கள் இடம்: பழமொழியை மெய்ப்பித்து விடாதீங்க இளங்கோவன்!

Updated : பிப் 21, 2022 | Added : பிப் 21, 2022 | கருத்துகள் (61) | |
Advertisement
எஸ்.சுவாமிநாதன், நெல்லையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒரு மனிதன் போட்டிக்கு செல்கிறான் என்றால், எதிராளியுடன் மோதும் அளவுக்கு உடம்பில் பலம் இருக்க வேண்டும். அதேபோல, பந்தயத்தில் ஒருவன் ஈடுபடுகிறான் என்றால், அதற்குரிய தொகையை இடுப்பில் முடிந்து வைத்திருக்க வேண்டும். வெறும் கையால் முழம் போடக்கூடாது.தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன், இப்படித்தான்
இது, உங்கள், இடம், முதல்வர், ஸ்டாலின், ஓய்வு

எஸ்.சுவாமிநாதன், நெல்லையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

ஒரு மனிதன் போட்டிக்கு செல்கிறான் என்றால், எதிராளியுடன் மோதும் அளவுக்கு உடம்பில் பலம் இருக்க வேண்டும். அதேபோல, பந்தயத்தில் ஒருவன் ஈடுபடுகிறான் என்றால், அதற்குரிய தொகையை இடுப்பில் முடிந்து வைத்திருக்க வேண்டும். வெறும் கையால் முழம் போடக்கூடாது.தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன், இப்படித்தான் வெறும் கையால் முழம் போட்டுள்ளார்.

அதாவது, 'அமெரிக்க ஜனாதிபதி, இங்கிலாந்து பிரதமர், ரஷ்ய அதிபர் போன்றவர்கள் எல்லாம், இரண்டு நாட்கள், நான்கு நாட்கள் என ஓய்வு எடுப்பர். ஆனால், எட்டு மாதங்களில் ஒரு நாள் கூட, முதல்வர் ஸ்டாலின் ஓய்வு எடுக்கவில்லை. 'அப்படி அவர் ஒரு நாள் ஓய்வு எடுத்தார் என யாராவது நிரூபித்தால், அந்த நபருக்கு 10 லட்சம் ரூபாய் தருகிறேன். என்னிடம் பணம் இல்லை; கடன் வாங்கியாவது தந்து விடுவேன்' என்று வாய் சவடால் விட்டு இருக்கிறார். கையில் துட்டு இல்லாத நபர், எதற்கு சவால் விட வேண்டும்?

10 லட்சம் ரூபாய்க்கு ஏன், 'பெட்' கட்ட வேண்டும்?இளங்கோவனின் பந்தயத்தில், முதல்வரின் மனைவி துர்கா தவிர, வேறு ஒருவராலும் வெற்றி பெற முடியாது. ஒரு வேளை ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர் வாயிலாக, ஒருவர் இந்த தகவல் அறிந்து, அதை இளங்கோவனுக்கு தெரிவித்தாலும், ௧௦ லட்சம் ரூபாய் பரிசுத் தொகை உடனடியாக கைக்கு கிடைக்கப் போவதில்லை.'என்னிடம் பணம் இல்லை' என்று இளங்கோவன் உஷாராக முன்கூட்டியே சொல்லி விட்டார்.


latest tamil newsஅவர் எப்போது கடன் வாங்கிக் கொடுப்பது? அப்படியே யாராவது கடன் கொடுக்க முன் வந்தாலும், -உத்தரவாத கையெழுத்து யார் போடுவர்?தற்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி போடுவாரா? இல்லை... முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் போடுவாரா?அட விடுங்க; மறைந்த நேருவின் கொள்ளுப்பேரன் ராகுல், அந்த ௧௦ லட்சம் ரூபாய் கடனுக்கு இளங்கோவனுக்காக ஜாமின் கையெழுத்து போடுவாரா?வாய் இருக்கிறது என்பதற்காக, ஏதாவது உளறிக் கொட்டி கிளறி மூட வேண்டும் என்று அவசியமில்லை. 'தவளை தன் வாயால் கெடும்' என்ற பழமொழியை மெய்ப்பித்து விடாதீர்கள் இளங்கோவன்!

Advertisement
வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
21-பிப்-202220:10:37 IST Report Abuse
sankaranarayanan இது அண்டப்புளுகு ஆகாய புளுகா இருக்கிறதே இப்படியம் பேச காங்கிரசில் ஆட்கள் இருக்கிறார்களா? சென்ற தேர்தலில் பத்து லட்சம் பணம் செலவு பண்ணி தோற்றதால் அதே நினைப்பு இவருக்கு. ஒரே புலம்பல் பத்து லட்சம் பத்து லட்சம் என்று. ஏதோ தெரியா தனமாக சொல்லிவிட்டார். பெரிசு படுத்தாதீங்கோ. விட்டுத்தள்ளுங்களேன்
Rate this:
Cancel
21-பிப்-202219:29:45 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் …..
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
21-பிப்-202219:21:14 IST Report Abuse
Krishnamurthy Venkatesan கர்மவீரர் காமராசர் அவர்களின் ஆட்சிக்கு பின் தமிழகத்தை தாரை வார்த்து கழகங்களிடம் கொடுத்த காங்கிரஸ்காரர்கள். மீண்டும் அவர்களின் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வர எந்த ஒரு முயற்சியையும் செய்யாமல், கழகங்கள் போடும் (?) ஒரு சில சீட்டுகளுக்காக கழகங்களின் முழு நேர விசுவாசியாக மாறிவிட்டார்கள். கழகங்களுக்கு ஜால்றா போடுவதில் அவர்களிடம் போட்டி இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X