மாநிலங்களின் ஒன்றியமே இந்தியா: ராகுல் பேச்சு

Updated : பிப் 21, 2022 | Added : பிப் 21, 2022 | கருத்துகள் (72) | |
Advertisement
இம்பால்: நமது நாட்டை மாநிலங்களின் ஒன்றியம் என்றும் இதுதான் நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வரையறை எனவும் காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசியுள்ளார்.மணிப்பூர் மாநில சட்டசபைத் தேர்தலையொட்டி இம்பாலில் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் காங்., எம்.பி., ராகுல் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: நமது நாட்டின் நிலைமை குறித்து நான் பார்லிமென்டில் பேசினேன். அங்கு நான் நமது
Rahul, India, Union of States, இந்தியா, மாநிலங்களின் ஒன்றியம், ராகுல், காங்கிரஸ்

இம்பால்: நமது நாட்டை மாநிலங்களின் ஒன்றியம் என்றும் இதுதான் நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வரையறை எனவும் காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசியுள்ளார்.

மணிப்பூர் மாநில சட்டசபைத் தேர்தலையொட்டி இம்பாலில் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் காங்., எம்.பி., ராகுல் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: நமது நாட்டின் நிலைமை குறித்து நான் பார்லிமென்டில் பேசினேன். அங்கு நான் நமது நாட்டை மாநிலங்களின் ஒன்றியம் என்று விவரித்தேன். இதுதான் நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வரையறை. அரசியலமைப்புச் சட்டத்தில், மாநிலங்களின் ஒன்றியம் என நம்மை வரையறுத்தே தேர்வு செய்துள்ளோம்.

எனது பேச்சுக்கு பா.ஜ., மற்றும் ஆர்எஸ்எஸ் எதிர்வினையாற்றியது. இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்று நான் சொன்னது பிடிக்கவில்லையா? மற்ற எல்லாக் கருத்துகளையும், மொழிகளையும், மற்ற எல்லாப் பண்பாடுகளையும் விட உயர்ந்த ஒரே சித்தாந்தம், ஒரே கருத்து, ஒரே மொழி என்பதுதான் அவர்களின் (பா.ஜ.,வின்) பார்வை. இன்று இந்தியாவில் நடக்கும் போர் இதுதான். பா.ஜ., மற்றும் ஆர்எஸ்எஸ் மணிப்பூருக்கு வரும்போது மரியாதையுடன் வரவில்லை, புரிந்துகொண்டு வரவில்லை. அவர்கள் ஆதிக்க உணர்வுடன் வருகிறார்கள்.


latest tamil news


நான் இங்கு வரும்போது, நான் என்ற உணர்வுடன் வரவில்லை, பணிவுடன் வருகிறேன். ஏனென்றால் நீங்கள் கொடுக்க நிறைய இருக்கிறது, உங்களிடமிருந்து நான் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். பலதரப்பட்ட பழங்குடியினர், பள்ளத்தாக்குகள், மலைகள், இங்குள்ள அனைவரிடமிருந்தும் கற்றுக் கொள்ள விரும்புகிறேன் இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
22-பிப்-202207:18:36 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan 75 வருடத்திற்குப பின்தான் திராவிட கும்பலுக்கு ஒன்றியம் என்று தெரிகிறது. கூலி கொடுக்கும் திமுகவுக்கு ராகுல் ஜால்ரா போடுகிறார்
Rate this:
Cancel
Venkatakrishnan - Mumbai,இந்தியா
22-பிப்-202204:36:33 IST Report Abuse
Venkatakrishnan சாரி சார்... இது சனாதன தர்மம் அல்ல.. பாகிஸ்தானும் பாரதத்தின் ஒரு அங்கம் என்று சொல்லுங்கள்... உங்களுக்கும் பஜனை பாடுவோம்
Rate this:
Cancel
Arunkumar -  ( Posted via: Dinamalar Android App )
22-பிப்-202203:43:02 IST Report Abuse
Arunkumar is there any state military,navy,army and air force separated by languages and states???so protection only needed India not others isnt
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X