ஓட்டுச்சாவடிகளை ஆக்கிரமித்துள்ள திமுக.,வினர்: அண்ணாமலை குற்றச்சாட்டு

Updated : பிப் 21, 2022 | Added : பிப் 21, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
சென்னை: சென்னையில் ஒட்டுமொத்தமாக 40 ஓட்டுச்சாவடியை திமுக நிர்வாகிகள் ஆக்கிரமித்துள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: நகர்ப்புற தேர்தல் ஓட்டுப்பதிவில் முறைகேடுகள் நடந்துள்ளன. ஆனால், தேர்தல் ஆணையம் அதனைக் கண்டுகொள்ளவில்லை. கோவை, சென்னையில் திமுக.,வினரால் பா.ஜ., வேட்பாளர்கள் அதிகம்
Tamilnadu, BJP, Annamalai, DMK, LocalBodyElections, உள்ளாட்சி தேர்தல், பாஜக, பாஜ, அண்ணாமலை, திமுக, ஓட்டுச்சாவடி

சென்னை: சென்னையில் ஒட்டுமொத்தமாக 40 ஓட்டுச்சாவடியை திமுக நிர்வாகிகள் ஆக்கிரமித்துள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: நகர்ப்புற தேர்தல் ஓட்டுப்பதிவில் முறைகேடுகள் நடந்துள்ளன. ஆனால், தேர்தல் ஆணையம் அதனைக் கண்டுகொள்ளவில்லை. கோவை, சென்னையில் திமுக.,வினரால் பா.ஜ., வேட்பாளர்கள் அதிகம் தாக்கப்பட்டுள்ளனர். கோவை, மதுரை, திருச்சி, திருவண்ணாமலையில் பா.ஜ., வேட்பாளர்கள், தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒட்டுமொத்தமாக 40 ஓட்டுச்சாவடியை திமுக நிர்வாகிகள் ஆக்கிரமித்திருந்தனர்.



latest tamil news


கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளது. மேலும், சில ஓட்டுச்சாவடிகளின் அருகிலேயே வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முறைகேடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
22-பிப்-202206:28:47 IST Report Abuse
Mani . V தலைநகரம் திரைப்படத்தில் வடிவேல், சுந்தர். சி யிடம் சொல்வது மாதிரி, "இதே அண்ணாமலை மட்டும் அதிமுக வாக இருந்தால் இந்நேரம் கைது செய்திருப்போம். அவர் பாஜக என்பதால் தப்பித்தார். அதுக்காக அந்த தைரியத்தோடு ஓட்டுச் எண்ணும் இடத்திற்கு வர வேண்டாம். அங்கு எங்கள் அடியாட்கள் ஸாரி தொண்டர்கள் கண்ணியத்தை கடைபிடிக்க மாட்டார்கள்".
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
22-பிப்-202206:10:52 IST Report Abuse
M  Ramachandran நீங்கள் என்ன தான் கரடியாக கத்தினாலும் அவர்கள் உரிய முறையில் அரசு அதிகாரிகலை மற்றும் போலீசு குண்டர் படையை சகிதம் அவர்கள் பரம்பரையை குணத்தைய அரசும் ஒட்டு என்னும் இடங்களும் அவர்களிடம். அதை வைத்து சாதித்து காட்டு வார்கள். சுடாலினும் பீத்திக்கொள்வார்.
Rate this:
Cancel
Raman - kottambatti,இந்தியா
22-பிப்-202205:33:58 IST Report Abuse
Raman முதலில் எங்கே புகார் தரணும் என்று சொல்லிக்கொடுங்கள் உங்க ஐபிஎஸ்க்கு.. உள்ளாட்சித்தேர்தல் முறைகேடுகள் என்று இந்திய தேர்தல் ஆணையதுக்கு போயி புகார் செய்துள்ளார் .. அவர்கள் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தில் போயி புகார் செய்ய சொல்லியுள்ளார்கள் எப்படி ஹி ஹி ஹி
Rate this:
R MANIVANNAN - chennai,இந்தியா
22-பிப்-202214:51:05 IST Report Abuse
R MANIVANNANபுகார் எங்கு கொடுக்க வேண்டும் என்று தெரியவில்லை . இவரெல்லாம் IPS...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X