தனித்து போட்டியிட்டு முத்திரை பதித்த பா.ஜ., : சென்னையில் மீண்டும் தடம் பதித்தது

Updated : பிப் 22, 2022 | Added : பிப் 22, 2022 | கருத்துகள் (42) | |
Advertisement
சென்னை :நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தனித்து போட்டியிடுவதால், பா.ஜ., பெரிய தோல்வியை சந்திக்கும் என்று, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வைத்த விமர்சனங்களை தகர்த்தெறிந்து சென்னை மாநகராட்சியில் மீண்டும் தடம் பதித்துள்ளது. அதுமட்டுமின்றி, 242 பேரூராட்சி வார்டுகளையும், 59 நகராட்சி வார்டுகளையும், 22 மாநகராட்சி வார்டுகளையும் கைப்பற்றி, மூன்றாவது பெரிய கட்சியாக, பா.ஜ.,
 தனித்து போட்டி,முத்திரை, பா.ஜ., : சென்னை, தடம்

சென்னை :நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தனித்து போட்டியிடுவதால், பா.ஜ., பெரிய தோல்வியை சந்திக்கும் என்று, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வைத்த விமர்சனங்களை தகர்த்தெறிந்து சென்னை மாநகராட்சியில் மீண்டும் தடம் பதித்துள்ளது.

அதுமட்டுமின்றி, 242 பேரூராட்சி வார்டுகளையும், 59 நகராட்சி வார்டுகளையும், 22 மாநகராட்சி வார்டுகளையும் கைப்பற்றி, மூன்றாவது பெரிய கட்சியாக, பா.ஜ., உருவெடுத்துள்ளது.

தமிழக , நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ,பா.ஜ., தனித்து போட்டியிடுவதாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அதிரடியாக அறிவித்தார். அனைத்து வார்டுகளுக்கும், பா.ஜ., வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு போட்டியிட்டனர்.


latest tamil news




இந்நிலையில் இன்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில், சென்னை மாநகராட்சியில், 134வது வார்டில் போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி பெற்றுஉள்ளார்.

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரணியல் பேரூராட்சியின் மொத்தம் உள்ள, 15 வார்டுகளில், 12ல் பா.ஜ., வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். நாகர்கோவில் மாநகராட்சி ஒன்பது வார்டு .

மதுரை:

மதுரை மாநகராட்சியின், 86வது வார்டில் பா.ஜ., வெற்றி பெற்றது.

திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சியின் 56வது வார்டில் பா.ஜ., வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

சென்னையில் துறைமுகம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, ஆறு வார்டுகளில், பா.ஜ., இரண்டாவது இடத்தை பிடித்தது.இதேபோல், மற்ற மாநகராட்சிகளில், 22 வார்டுகள்; நகராட்சிகளில், 59 வார்டுகள்; பேரூராட்சிகளில் 242 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதோடு, சென்னை, கோவை உட்பட முக்கிய மாநகராட்சிகளின் பல வார்டுகளில் அ.தி.மு.க.,வை பின்னுக்கு தள்ளி, இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதையடுத்து, விமர்சனங்களை தகர்த்தெறிந்து தனித்து போட்டியிட்டு, முத்திரை பதித்த பா.ஜ., தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venugopal S -  ( Posted via: Dinamalar Android App )
23-பிப்-202222:54:20 IST Report Abuse
Venugopal S இப்படி எல்லாம் ஏதாவது சொல்லி கொள்ள வேண்டியதுதான்.
Rate this:
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
23-பிப்-202216:22:47 IST Report Abuse
Poongavoor Raghupathy அண்ணாமலை பிஜேபியை தமிழ்நாட்டில் ஆட்சி கட்டிலில் உட்கார வைத்தால்தான் மக்கள் நிம்மதியாக இருக்க முடியும், அண்ணாமலைக்கு அந்த தகுதி உள்ளது. மக்கள் தேர்தலில் பணம் திமுகவிடம் இருந்து வாங்கிக்கொண்டாலும் திமுகவிற்கு வாக்கு அளிக்காமல் பிஜேபிக்கு வாக்கு அளிக்கும் காலம் தொலைவில் இல்லை.
Rate this:
Cancel
Chandra - Chennai,இந்தியா
23-பிப்-202214:18:43 IST Report Abuse
Chandra Work hard more.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X