சென்னை: தமிழகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள அலங்கார ஊர்திகள் மேலும் ஒரு வாரம் மெரினாவில் நிறுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
சென்னையில் குடியரசு தின விழாவில் செய்தித் துறை சார்பில் விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் மூன்று அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடந்தது. இதனை மாநிலம் முழுவதும் மக்கள் கண்டுகளிக்க அந்த ஊர்திகளை பல்வேறு மாவட்டங்களுக்கு ஊர்வலமாக செல்ல முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். பல இடங்களில் இந்த அலங்கார ஊர்திகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், சென்னை மக்கள் பார்வையிட சென்னை மெரினா கடற்கரை இணைப்பு சாலையில் விவேகானந்தர் இல்லம் எதிரே பொதுமக்களுக்கு கடந்த 20ம் தேதி முதல் காட்சி படுத்தப்பட்டுள்றது. இந்த நிலையில், மேலும் ஒரு வார காலத்திற்கு அவ்விடத்தில் அலங்கார ஊர்திகளை பார்வையிடலாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE