கொங்கு கோட்டையில் 'ஓட்டை' விழுந்தது எப்படி?

Updated : பிப் 24, 2022 | Added : பிப் 24, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
கொங்கு மண்டலம் அ.தி.மு.க.,வின் அசைக்க முடியாத கோட்டை என்பதை, நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் மாற்றியுள்ளன.குறிப்பாக, முன்னாள் முதல்வர் பழனி சாமி மற்றும் 'பவர்புல்' முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆகியோரின் சொந்த மாவட்டங்களில், தி.மு.க., இமாலய வெற்றியை பெற்று, இருவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, கொங்கு மண்டலத்தைச்கொ
ங்கு மண்டலம் அ.தி.மு.க.,வின் அசைக்க முடியாத கோட்டை என்பதை, நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் மாற்றியுள்ளன.குறிப்பாக, முன்னாள் முதல்வர் பழனி சாமி மற்றும் 'பவர்புல்' முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆகியோரின் சொந்த மாவட்டங்களில், தி.மு.க., இமாலய வெற்றியை பெற்று, இருவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.latest tamil news
கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பழனிசாமி, வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் என பலரும் அமைச்சரவையில் முதல்வர் பொறுப்பு, உள்ளாட்சி துறை, மின்சாரம், டாஸ்மாக், போக்குவரத்து, பள்ளிக்கல்வி என மிக முக்கியமான துறைகளை கையாண்டனர். சேலம், கோவை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மட்டும், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பாலம், சாலை விரிவாக்கம் போன்ற கட்டமைப்பு பணிகள் நடந்தன.

இதன் பயனாகவே, கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., ஆட்சியைக் கைப்பற்றிய போதும், கொங்கு மண்டலத்தில் அக்கட்சிக்கு படுதோல்வி கிடைத்தது.அதிலும் கோவை மாவட்டத்தில், 10 தொகுதி களிலும் தி.மு.க., கூட்டணி தோற்றது.

ஆனால், தற்போது கோவை மாநகராட்சி உட்பட மாவட்டத்தில், 95 சதவீத நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளை தி.மு.க., கைப்பற்றி உள்ளது.இந்த வெற்றிக்கு, ஆளும்கட்சி வாரி வழங்கிய பணமும், பரிசு பொருட்களும் தான் காரணம்; அமைச்சர் செந்தில்பாலாஜி வகுத்த தேர்தல் வியூகம் தான் வெற்றியைத் தந்தது என, பலவிதமான விவாதங்கள் கிளம்பிஉள்ளன. அதையும் தாண்டி, தி.மு.க.,வின் இந்த வெற்றிக்கு, மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களின் செயல்பாடுகள் தான் காரணம் என்ற கருத்தும் முன் வைக்கப்படுகிறது.


latest tamil news

நடுநிலை வாக்காளர்


கோவை மாவட்டத்தில் ஆளும்கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ.,வும் இல்லாத நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் ஆளும்கட்சிக்கு வாய்ப்புத் தராமல் போனால், தங்களுடைய பகுதியில் எந்த பணியும் நடக்காது என, மக்கள் அச்சமடைந்தது முக்கிய காரணம்.


பணமே வாங்காத நடுநிலை வாக்காளர்கள் பலரும், ஆளும்கட்சிக்கு ஓட்டளித்திருப்பது இதை உறுதிப்படுத்தியுள்ளது.அதையும் விட, ஒன்பது மாதங்களில், அ.தி.மு.க.,வின் 9 எம்.எல்.ஏ.,க்களின் செயல்பாடுகள் மீதும் மக்களுக்குக் கடும் அதிருப்தி ஏற்பட்டு உள்ளது. தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களுக்காக ஒன்றுபட்டு மனு கொடுத்து போராடும் இந்த எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபையில் மாவட்டத்துக்காக எதையும் பேசவில்லை என்பது இந்த அதிருப்திக்கு பிரதான காரணம்.பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் மட்டுமே, கோவை சார்ந்த பல்வேறு விஷயங்களையும் சட்டசபையில் விளக்கமாக பேசி, கோரிக்கையை முன் வைத்து வருகிறார்.


பரிந்துரை


அ.தி.மு.க., அரசு அறிவித்து, நிதி ஒதுக்கிய மேட்டுப்பாளையம் பை - பாஸ் சாலையை, தற்போதைய தி.மு.க., அரசு கைவிட்டு, தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு பரிந்துரைத்துள்ளது. மேற்கு புறவழிச்சாலை திட்டத்துக்கு நிதி ஒதுக்கியும், பணி துவங்காமல் கிடப்பில் கிடக்கிறது. வெள்ளலுார் பஸ் ஸ்டாண்ட் திட்டம் முடங்கியுள்ளது.

இவற்றை எதிர்த்துஅ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் குரல் கொடுக்கவில்லை.இனி வரும் நாட்களிலாவது, வெறும் அரசியல் மட்டும் செய்யாமல், கோவைக்கான திட்டங்களுக்காகக் குரல் கொடுக்கவும், நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடவும் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் முன் வந்தால் மட்டுமே, நொறுங்கிய கோட்டையை, மீண்டும் துாக்கி நிறுத்த முடியும் என, மக்கள் கருதுகின்றனர்.
சேலத்தில் சாதித்துக் காட்டிய அமைச்சர் நேரு!


வீரபாண்டி ஆறுமுகம் இருந்த வரை, தி.மு.க.,வின் கோட்டை என கூறப்பட்ட சேலம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிரசார வியூகத்தால், 2011 முதல் சேலம் அ.தி.மு.க., கோட்டையாக மாற்றப்பட்டது.பழனிசாமி முதல்வரான பின், சேலம் மாவட்டத்தில் மேம்பாலம், சாலை திட்டங்கள் என கட்டமைப்புக்களை கொண்டு வந்தார். இது, 2021 தேர்தலில், மாவட்டத்தில் அ.தி.மு.க, 10 தொகுதிகளை கைப்பற்ற உதவியது. ஒரு தொகுதியில் மட்டுமே தி.மு.க.,வால் வெல்ல முடிந்தது.

முதல்வர் ஸ்டாலின் பதவியேற்ற பின், கொங்கு மண்டலத்தின் அங்கமான சேலத்தை மீண்டும் தி.மு.க.,வின் கோட்டையாக மாற்ற, மாவட்டத்திற்கு பொறுப்பாளராக அமைச்சர் நேருவை நியமித்தார். அவரும், சேலத்தில் களமிறங்கி கோஷ்டி நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து பேசி, எச்சரித்தார்.

தன்னுடைய திருச்சி மாவட்ட நிர்வாகிகள் மூலம், சேலம் தி.மு.க.,வினரின், 'பல்ஸ்' பார்த்தார். கோஷ்டி அரசியலுக்கு, துாபம் போட்டு தனி ஆவர்த்தனம் செய்து வந்த, சேலம் தி.மு.க.,- எம்.பி., பார்த்திபனை, தலைமையின் அனுமதியோடு அடக்கி வைத்தார்.

அத்துடன், மநகர மாவட்ட செயலர், இரு மாவட்ட பொறுப்பாளர்களிடம், 'பக்குவமாக' பேசி, தேர்தல் வேலைகளை முடுக்கி விட்டார். உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன், மாவட்டம் முழுவதும் பயணம் செய்து, மக்களிடம் குறைகள் கேட்டறிந்து, 40 ஆயிரத்துக்கும் அதிகமான மனுக்களை பெற்றார். முதல்வரை அழைத்து, சேலத்தில் அரசு விழா எடுத்தார்.


அதில், 30 ஆயிரத்து, 837 பயனாளிகளுக்கு, 168.64 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதுடன், 1,242 கோடி ரூபாய் மதிப்பில், புதிய வளர்ச்சித்திட்டத்தை முதல்வரால் அறிவிக்க செய்தார்.தி.மு.க.,வின் இந்த அணுகுமுறையும், பணம், பரிசு பொருள் என வழக்கமான தேர்தல் பார்முலாவும், சேலம் மாவட்டத்தை மீண்டும் தி.மு.க., பக்கம் இழுத்து வந்துள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kadaparai Mani - chennai,இந்தியா
24-பிப்-202211:57:25 IST Report Abuse
Kadaparai Mani அதிமுக ஆளும் கட்சியாக இருந்தால் இதே வெற்றியை பெற்று இருக்கும் .2011.திமுக தோல்வி இதே model. தான் .அராஜகம் மட்டும் தான் திமுக கொஞ்சம் ஓவர் .
Rate this:
Cancel
AKM KV SENTHIL MUSCAT - muscat,ஓமன்
24-பிப்-202210:23:36 IST Report Abuse
AKM KV SENTHIL MUSCAT அதே சமயம் காசு அனைத்து தரப்பிலும் தரப்பட்டது என்பது பரவலான கருத்து அவ்வாறு அனைத்து தரப்பிலும் காசு வாங்கப் பட்டாலும் வாக்கு ஒருவருக்கே அதனையும் தீர்மானித்துதானே வாக்கு செலுத்தி உள்ளார்கள் என்பதையும் யோசிக்கவேண்டும்
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
24-பிப்-202210:17:47 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan தி முகா வழக்கப்படி குறுக்கு வேலை செய்துள்ளது. மாற்று கட்சிக்கு மட்டுமே வாக்களிப்பவர்களை தேடி வாக்களிக்க வராமல் இருக்க பணம் கொடுத்துள்ளனர். வாக்கு சதவீதம் குறைய அதுவும் ஒரு காரணம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X