சென்னைக்கு யார் மேயர்? தி.மு.க., தலைமை முடிவுக்கு 13 பேர் காத்திருப்பு| Dinamalar

சென்னைக்கு யார் மேயர்? தி.மு.க., தலைமை முடிவுக்கு 13 பேர் காத்திருப்பு

Updated : பிப் 24, 2022 | Added : பிப் 24, 2022 | கருத்துகள் (7) | |
சென்னை மாநகராட்சியின் மேயர் பதவிக்கு, தி.மு.க.,வில் பட்டியலின பெண் கவுன்சிலர்கள் ௧௩ பேர் போட்டியில் உள்ளனர். இவர்களில் மேயர் யார் என்பதை, தி.மு.க., தலைமை அறிவிப்பதற்காக, அவர்கள் காத்திருக்கின்றனர். அதேநேரம், துணை மேயர், மண்டல குழு தலைவர் பதவிகளுக்கு, அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலர்களிடம் விருப்பம் தெரிவித்து, இதர சமூகத்தை சேர்ந்தவர்கள் முயற்சித்து

சென்னை மாநகராட்சியின் மேயர் பதவிக்கு, தி.மு.க.,வில் பட்டியலின பெண் கவுன்சிலர்கள் ௧௩ பேர் போட்டியில் உள்ளனர். இவர்களில் மேயர் யார் என்பதை, தி.மு.க., தலைமை அறிவிப்பதற்காக, அவர்கள் காத்திருக்கின்றனர். அதேநேரம், துணை மேயர், மண்டல குழு தலைவர் பதவிகளுக்கு, அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலர்களிடம் விருப்பம் தெரிவித்து, இதர சமூகத்தை சேர்ந்தவர்கள் முயற்சித்து வருகின்றனர்.latest tamil newsசென்னை பெருநகர மாநகராட்சியில், 1933ம் ஆண்டு முதல், மேயரின் பதவிக்காலம் ஓராண்டாக இருந்ததது. மாநகராட்சி மேயர் பதவிக்காலம், 1996 முதல், ஐந்து ஆண்டாக அதிகரிக்கப்பட்டது. மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் வாயிலாக, மறைமுக தேர்தலில் தேர்வு செய்யும் மேயராக இல்லாமல், மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறை கொண்டு வரப்பட்டது. அப்போது, முதன் முறையாக, சென்னை மாநகராட்சியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல் மேயர் என்ற அந்தஸ்தை, தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் பெற்றார்.

தொடர்ந்து, 2001ம் ஆண்டு நடந்த தேர்தலிலும், சென்னை மாநகராட்சி மேயராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், எம்.எல்.ஏ., மற்றும் மேயர் என, ஆதாயம் தரக்கூடிய இரட்டை பதவிகள் வகிக்க கூடாது என்ற விதியின் கீழ், மேயர் பதவியில் இருந்து விலகினார்.

அதன்பின், 2006ல், மறைமுக தேர்தல் முறை கொண்டு வரப்பட்டு, தி.மு.க.,வை சேர்ந்த சுப்பிரமணியன், கவுன்சிலர்கள் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட மேயரானார்.2011ல் மீண்டும் தேர்தல் முறை மாற்றப்பட்டு, மக்களால் தேர்வு செய்யப்பட்ட இரண்டாவது மேயர் என்ற அந்தஸ்தை, அ.தி.மு.க.,வின், சைதை துரைசாமி பெற்றார். தற்போது மீண்டும், மறைமுக தேர்தல் வாயிலாக, மேயரை தேர்ந்தெடுக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.


latest tamil newsநடந்து முடிந்துள்ள சென்னை மாநகராட்சி தேர்தலில், தி.மு.க., 153 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் - 13; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், வி.சி., ஆகிவை தலா 4; ம.தி.மு.க., - 2; இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா, 1 என, 25 இடங்களில் வென்றுள்ளன.

ஒட்டுமொத்தமாக தி.மு.க., கூட்டணி, 178 இடங்களை கைப்பற்றி, மாநகராட்சியின் மேயர், துணை மேயர், மண்டல வாரியான, 15 மண்டலக் குழு தலைவர் பதவிகளை கைப்பற்றியுள்ளது.
சென்னை மாநகராட்சி மேயர் பதவி, பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், பட்டியலின பெண்களுக்கு 16 வார்டுகள் என, 100 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன. இவற்றில் பட்டியலின பெண் வார்டு ஒதுக்கீட்டில், தி.மு.க., - 12, காங்கிரஸ் - 2; அ.தி.மு.க., வி.சி., தலா, ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளன.


latest tamil newsஅதேபோல், தி.மு.க., சார்பில், பட்டியலினத்தை சேர்ந்த ஷீபா என்பவர், பொதுப்பிரிவு வார்டான 122ல் வெற்றிப்பெற்றுள்ளார். எனவே, மேயர் பதவிக்கு, தி.மு.க., பட்டியலின பெண் கவுன்சிலர்களில் ௧௩ பேர் தகுதி பெற்றவர்களாக உள்ளனர்.

இவர்கள், தி.மு.க., தலைமை மற்றும் மேலிடத்தலைவர்களின் குடும்பத்தினர், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலர்கள் வாயிலாக, தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.

'கவுன்சிலர்கள் பதவியேற்கும் நாளான, மார்ச் 2 அல்லது அதற்கு முன், சென்னை மாநகராட்சியின் மேயர் யார் என்பதை தி.மு.க., தலைமை அறிவிக்கும். தலைமைக்கு கட்டுப்பட்டு நடக்கவும்' என, அவர்களுக்கு கட்சி மேலிட தலைவர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

அதேநேரம், துணை மேயர் பதவிக்கு, தேனாம்பேட்டை மண்டலத்தில் வெற்றி பெற்றுள்ள மாவட்ட செயலர் உட்பட சிலர் விருப்பம் தெரிவித்து உள்ளனர். இதர சமூகத்தை சேர்ந்த உறுப்பினர்கள், மேயர், துணை மேயர் பதவி இல்லாவிட்டாலும், மண்டல குழு தலைவர் பதவியை பிடித்து விட வேண்டும் என்ற நோக்கில், களமிறங்கி உள்ளனர்.இதற்காக, அந்தந்த வார்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களிடம், பல்வேறு வகையில் சலுகைகளை அறிவித்து, ஆசையை துாண்டி வருகின்றனர்.

- நமது நிருபர் குழு -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X