பூணுால் அறுப்பதாக விஷமத்தனம்: பிராமணர் சங்கம் போலீசில் புகார்

Added : பிப் 24, 2022 | கருத்துகள் (64) | |
Advertisement
சென்னை : 'தமிழகத்தில், மதக்கலவரத்தை துாண்ட முயற்சி செய்யும், வி.சி., நிர்வாகி வன்னியரசு; இந்திய தேசிய லீக் நிர்வாகி தடா ரஹீம் ஆகியோரை கைது செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று அளித்த புகார்:வி.சி., துணை பொதுச் செயலர்
VC,Muslim League,Sacred Thread,Sankara Mutt, Brahmins

சென்னை : 'தமிழகத்தில், மதக்கலவரத்தை துாண்ட முயற்சி செய்யும், வி.சி., நிர்வாகி வன்னியரசு; இந்திய தேசிய லீக் நிர்வாகி தடா ரஹீம் ஆகியோரை கைது செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று அளித்த புகார்:வி.சி., துணை பொதுச் செயலர் வன்னியரசு, பிப்.,17ல், சமூக வலைதளத்தில், 'எங்கள் கட்சி தலைவர் திருமாவளவன் முதல்வராக வரும்போது, தமிழகத்தில் பூணுால் அணிய தடை விதிக்கப்படும்' என, பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு திருமாவளவன் வருத்தம் தெரிவிக்கவில்லை; வன்னியரசை கண்டிக்கவும் இல்லை.latest tamil news


பூணுால் அணிவது பிரமாணர்கள் மட்டுமல்ல. விஸ்வகர்மா, நகரத்தார், வாணிப செட்டியார், தெலுங்கு பேசும் ஆரிய வைசியர்கள், தங்களின் விசேஷ மற்றும் பண்டிகை நாட்களில் பூணுால் அணிவது, அவர்களின் புனிதமான வழக்கம்; சம்பிரதாயம். இது தெரியாமல், வன்னியரசு மனம் போன போக்கில், விஷமத்தனமான கருத்துகளை தெரிவித்து வருகிறார். இவரை கைது செய்ய வேண்டும்.இந்திய தேசிய லீக் கட்சியின் நிர்வாகியான தடா ரஹீம் என்பவர், 'காஞ்சி சங்கர மடத்தில் இருந்து, பூணுால் அறுக்கும் போராட்டம் நடத்துவோம்' எனக் கூறியுள்ளார். இது மிகவும் விஷமத்தனமானது.எங்களுக்கும், பட்டியல் இனத்தவர் மற்றும் முஸ்லீம்களுக்கும் எவ்வித பிரச்னையோ, ஜாதி, மதக்கலவரமோ ஏற்பட்டதாக வரலாறு இல்லை. நாங்கள் அனைவரும் நண்பர்கள்.வேறு மாநிலத்தில் நடக்கும் அரசியல் ரீதியான போராட்டத்துடன், அனாவசியமாக பிராமணர் சமூகத்தை தொடர்புபடுத்தி, அச்சுறுத்தும் வகையில் பேசி, ஜாதி, மத கலவரத்தை துாண்டும் வன்னியரசு, தடா ரஹீம் போன்றவர்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Chennai,இந்தியா
24-பிப்-202219:39:20 IST Report Abuse
Balaji ஆளும் அரசு அடையாளத்தை மறைக்கும் விஷயங்களை விலக்கவேண்டிய இடங்களில் விலக்கவேண்டும் என்று சட்டம் இயற்றுவது எப்படி மதவாதமாகும்? அரசு இயற்றும் சமூகநல சட்டத்திற்கு சட்டப்படி எதிர்கொள்ளுங்கள்.. அதைவிடுத்து அதில் மதத்தை கலப்பது யார்? மதத்தை கலப்பதையும் தாண்டி எந்த விதத்திலும் அடையாளம் மறைக்கும் விதமாக இல்லாத வேறொரு இனத்தின் ஒரு அடையாளத்தின் மேல் வன்மம் பேசுவது நன்றாகவா உள்ளது.. இந்த புரிதல் கூட இல்லாமல் கொந்தளிப்பதுதான் மதவாதம்......
Rate this:
Cancel
24-பிப்-202216:45:24 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் ….
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
24-பிப்-202216:25:04 IST Report Abuse
sridhar கிறித்துவ இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசியவர்களை அதிவேகமாக கைது செய்த அரசு / போலீஸ் இப்போது வேடிக்கை பார்க்கும் மர்மம் என்ன .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X