ஓட்டு இயந்திரத்தில் 'கோல்மால்?' மறுதேர்தல் கோரி 13 வேட்பாளர்கள் மனு

Updated : பிப் 24, 2022 | Added : பிப் 24, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
கோவை : கோவை மாநகராட்சி, 32வது வார்டில் மறு தேர்தல் நடத்த கோரி 13 வேட்பாளர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.கோவை மாநகராட்சி, 32வது வார்டில், 14 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், தி.மு.க., வேட்பாளர் பார்த்திபன் என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்த அ.தி.மு.க., உள்பட மற்ற வேட்பாளர்கள் ஓட்டுப்பதிவு இயந்திரம் மாறியுள்ளதாக புகார் கூறி வெளிநடப்பு செய்து
urban local body election, EVM machine

கோவை : கோவை மாநகராட்சி, 32வது வார்டில் மறு தேர்தல் நடத்த கோரி 13 வேட்பாளர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

கோவை மாநகராட்சி, 32வது வார்டில், 14 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், தி.மு.க., வேட்பாளர் பார்த்திபன் என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்த அ.தி.மு.க., உள்பட மற்ற வேட்பாளர்கள் ஓட்டுப்பதிவு இயந்திரம் மாறியுள்ளதாக புகார் கூறி வெளிநடப்பு செய்து கல்லூரி வளாகத்திற்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை போலீசார் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் இருந்து வெளியேற்றினர்.


latest tamil news


இந்நிலையில் வெளிநடப்பு செய்த, 13 வேட்பாளர்கள் நேற்று கோவை மாவட்ட கலெக்டர் சமீரனிடம் மனு அளித்தனர்.வேட்பாளர்கள் கூறியதாவது:ஓட்டு இயந்திரத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு பிரிக்கப்பட்டு, முத்திரை அகற்றப்பட்டு இருந்தது. தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டபோது முறையாக பதிலளிக்க மறுத்துவிட்டனர். ஓட்டுப்பதிவு பெட்டியிலுள்ள இ.வி.எம்., எண்ணை தவிர மற்ற எண்களை பூத் ஏஜன்டுகளுக்கு காட்டாமல் ஓட்டுகளை எண்ண முயன்றனர். பூத் ஏஜன்ட் கையெழுத்துகளும் மாறுபட்டு இருந்தன.

கடந்த, 21ம் தேதி இரவு, 12.00 மணி முதல் அதிகாலை, 3.00 மணி வரை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் ஓட்டுப்பதிவு பெட்டிகளில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளது. கோவை மாநகராட்சி, 32வது வார்டில் மறு தேர்தல் நடத்த வேண்டும். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GANESUN - Delhi,இந்தியா
24-பிப்-202209:51:06 IST Report Abuse
GANESUN கலெக்டர் பாவம் என்ன செய்வார், நடவடிக்கை எடுத்தால் அவருக்குப் பாதுகாப்பு யார் தருவார்.
Rate this:
Cancel
24-பிப்-202208:37:06 IST Report Abuse
ஆரூர் ரங் விஞ்ஞான முறைப்படி 420 வேலைக்கு க்😛 அணுகுங்கள். சொறிவாலயம் தேனாம்பேட்டை சென்னை 600018
Rate this:
asaithambi - மும்பை,இந்தியா
24-பிப்-202210:04:30 IST Report Abuse
asaithambiஏன் படப்பை குணா, நெடுங்குன்றம் சூர்யா, புளியந்தோப்பு அஞ்சலை, கல்வெட்டு ரவி, புதுவை எழிலரசி, சீர்காழி சத்யா, பாம் வேலு, டோக்கன் ராஜா போன்ற தியாகிகள் உலவும் காட்டாலயம் , தி நகர் 600017 க்கு செல்லலாமே...
Rate this:
Sangikikaluku Sangu Oothupavan - THENI,இந்தியா
24-பிப்-202213:34:00 IST Report Abuse
Sangikikaluku Sangu Oothupavanஆசைத்தம்பி உங்க லிஸ்ட்ல, ஆரூர் ராங், ஊசிமணி காசிமணி, கூஜா ராஜா, துர்வாசம் வீசும் துர்வாசர், இப்படி பல பேரை விட்டு விட்டிங்க போங்க சார்...
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
24-பிப்-202208:18:17 IST Report Abuse
duruvasar தில்லுமுல்லு கழகம் ஆட்சியில் இப்படித்தான் இருக்கும். பிடிக்காதவர்கள் ஆந்திராவுக்கு போகலாம் என்று சொல்ல வாய்ப்பிருக்கிறது. இரவு டிவி விவாதத்ததை பார்க்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X