உக்ரைன் மீது ரஷ்யா போர் ; உலக நாடுகள் அதிர்ச்சி

Updated : பிப் 24, 2022 | Added : பிப் 24, 2022 | கருத்துகள் (56) | |
Advertisement
கியூ: உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ தாக்குதலை துவக்கியது. அங்குள்ள முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும் சப்தம் கேட்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நூற்றுக்கணக்கான உக்ரைன் வீரர்கள் பலியானதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. பல வீரர்கள் ரஷ்ய படையிடம் ரசரண் அடைந்துள்ளனர். இந்தியா உதவ வேண்டும் என உக்ரைன் கேட்டுள்ளது.இந்த போருக்கு யாரும்

கியூ: உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ தாக்குதலை துவக்கியது. அங்குள்ள முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும் சப்தம் கேட்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நூற்றுக்கணக்கான உக்ரைன் வீரர்கள் பலியானதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. பல வீரர்கள் ரஷ்ய படையிடம் ரசரண் அடைந்துள்ளனர். இந்தியா உதவ வேண்டும் என உக்ரைன் கேட்டுள்ளது.latest tamil news


இந்த போருக்கு யாரும் குறுக்கே வந்தால் வரலாறு காணாத அழிவை சந்திக்க நேரிடும் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரித்துள்ளார்.

உக்ரைன் மீது தாக்குதலை துவக்கிய ரஷ்யா .......

இரு நாடுகள் இடையே போர் துவங்கி இருப்பதால் உலக பொருளாதாரம் பாதிக்கும் என பல நாடுகள் கவலை அடைந்துள்ளன. போரை நிறுத்த உலக நாடுகள் உதவிட வேண்டும் என உக்ரைன் உள்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


latest tamil newsகிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நிலவி வருகிறது. 'நேட்டோ' எனப்படும், வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் விரும்புகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில், 1.50 லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வெளி நாட்டவர்கள் அவரவர் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.


இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் போர் நடவடிக்கை துவங்கி விட்டதாக அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ராணுவ வீரர்கள் தாக்குதலை துவக்கினர். உக்ரைன் தலைநகரான கியூ மற்றும் கிழக்கு உக்ரைனில் உள்ள டோனஸ்க், மைக்கோல், மரியூபோல், ஒடேசா, கார்கிவ் நகரங்களில் பீரங்கி தாக்குதல் மற்றும் வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன.போர் துவங்கி இருப்பதை ஐ.நா.,வுக்கான உக்ரைன் தூதர் செர்ஜி கில்சிஸ்டியா உறுதி செய்துள்ளார். " ரஷ்ய அதிபர் எனது நாட்டின் மீது போரை பிரகடனம் செய்திருப்பதாக ரஷ்ய ஐ.நா., தூதர் ஒத்து கொண்டார்." இவ்வாறு செர்ஜி கூறியுள்ளார்.


இந்திய பங்குச்சந்தை சரிவு


ரஷ்யாவின் நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்றயை போர் துவக்கத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
24-பிப்-202220:49:05 IST Report Abuse
Rajagopal இந்தியா வாயை மூடிக்கொண்டு இருப்பது நல்லது. இது நமது விவகாரம் அல்ல. நமக்கே ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றன. இந்தியா ரஷியாவை கண்டனம் செய்தால், புடின் உடனே காஷ்மீர் பாகிஸ்தானுக்குத்தான் சொந்தம் என்று சொல்லி விடுவார். இம்ரான் ஏற்கனவே கப்பரையோடு மாசுகோவில் இருக்கிறார். சீனா எப்போது வேண்டுமானாலும், ரஷியாவை பார்த்து, வடகிழக்கு மாநிலங்களில் நுழையலாம். இல்லை தைவானில் நுழையலாம். பாக்கிஸ்தான் காஷ்மீரில் உள்ளே வரலாம். அப்போது மேற்கத்திய நாடுகள் ஒரு ஆதரவும் தரமாட்டார்கள். பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் விற்பனை வேண்டுமானால் செய்வார்கள். ஜெனிவாவில் வந்து சமரசம் பேசுங்கள் என்பார்கள். உக்ரைன் அவர்களது விவகாரம். அவர்களே தீர்த்துக்கொள்ளட்டும்.
Rate this:
Louis - Chennai,யூ.எஸ்.ஏ
25-பிப்-202200:19:12 IST Report Abuse
Louisஇது போன்ற "எவன் செத்தல் எணக்கு என்ன" குணாதிசயம் இருக்கும் குடிமக்கள் உள்ளவரை இந்தியா ஒருபோதும் வல்லரசு ஆக முடியாது. இந்திய அரசு மக்கள் எண்ணங்கள் மேன்பட குழந்தை பருவத்தில் இருந்தே போதிக்க வேண்டும்....
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
24-பிப்-202219:47:21 IST Report Abuse
sankaseshan This is the true face of communist countries. They want neighboring countries tobe slave to them The same is with China and North Korea. When USSR broke such small prints like Ukraine Georgia Azerbaijan d indepence. Now Russia want to take back those countries. Moreover Ukraine have plenty of minerals deposits like uranium thorium and oil . Ukraine must be given all help it needs at this difficult situation .
Rate this:
Cancel
Senthil kumar - coimbatore,இந்தியா
24-பிப்-202219:17:44 IST Report Abuse
Senthil kumar எது எப்படி இருந்தாலும் மக்களின் நிலைமை பரிதாபத்துக்குரியது... போர் நடவடிக்கைகள் சரியான தீர்வை தருவதில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X