சினிமா கேமரா டெக்னீஷியன் தற்கொலை

Added : பிப் 24, 2022 | |
Advertisement
சென்னை : குடும்ப பிரச்னை காரணமாக, சினிமாவில் கேமரா டெக்னீஷியனாக பணிபுரிந்தவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சென்னை தி.நகர், ஸ்ரீ ராணிபுரத்தைச் சேர்ந்தவர் சூர்ய நாராயணன், 38; சினிமா துறையில் கேமரா டெக்னீஷியனாக பணிபுரிந்தார்.இவரது மனைவி ஆதிலட்சுமி, 35. இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இந்நிலையில் சூர்ய நாராயணன் நேற்று காலை, வீட்டில் யாருமில்லாத நேரத்தில்

சென்னை : குடும்ப பிரச்னை காரணமாக, சினிமாவில் கேமரா டெக்னீஷியனாக பணிபுரிந்தவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.



சென்னை தி.நகர், ஸ்ரீ ராணிபுரத்தைச் சேர்ந்தவர் சூர்ய நாராயணன், 38; சினிமா துறையில் கேமரா டெக்னீஷியனாக பணிபுரிந்தார்.இவரது மனைவி ஆதிலட்சுமி, 35. இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.



இந்நிலையில் சூர்ய நாராயணன் நேற்று காலை, வீட்டில் யாருமில்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்து வந்த பாண்டிபஜார் போலீசார், சூர்ய நாராயணனின் உடலை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.மேலும், சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரித்தனர்.



முதல்கட்ட விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக சூர்ய நாராயணன் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. எம்.ஜி.ஆர்., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X