மது அருந்த பணம் தராத தந்தை கொலை; பட்டதாரி இளைஞர் கைது

Added : பிப் 24, 2022 | கருத்துகள் (16) | |
Advertisement
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே மது அருந்த பணம் கொடுக்காத தந்தையை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.சிங்கம்புணரி அருகே அரசினம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம்,59, விவசாயி. இவரது மகன் முகுந்தன்,23, டிப்ளமோ படித்துவிட்டு சித்தாள் வேலைக்கு சென்று வந்தார். தினமும் வீட்டு மாடியில் அமர்ந்து மது அருந்தும் வழக்கத்தை கொண்டுள்ளார். நேற்றிரவு (பிப்ரவரி 23) வீட்டு
மது அருந்த பணம் தராத தந்தை கொலை; பட்டதாரி இளைஞர் கைது

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே மது அருந்த பணம் கொடுக்காத தந்தையை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

சிங்கம்புணரி அருகே அரசினம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம்,59, விவசாயி. இவரது மகன் முகுந்தன்,23, டிப்ளமோ படித்துவிட்டு சித்தாள் வேலைக்கு சென்று வந்தார். தினமும் வீட்டு மாடியில் அமர்ந்து மது அருந்தும் வழக்கத்தை கொண்டுள்ளார். நேற்றிரவு (பிப்ரவரி 23) வீட்டு மாடியில் மது அருந்தியவர், மேலும் மது அருந்த தனது தாயிடம் பணம் கேட்டுள்ளார். அவர் இல்லை என்று கூறவும் அவரை அடித்து உதைத்துள்ளார். பின்னர் உடல்நலக்குறைவால் படுத்திருந்த தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். அவரும் கொடுக்க மறுத்ததால் துணியால் கழுத்தை நெரித்து செல்வத்தை கொலை செய்துள்ளார். சிங்கம்புணரி போலீசார் முகுந்தனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
25-பிப்-202218:00:18 IST Report Abuse
Krishnamurthy Venkatesan படித்த முட்டாள். மிக கேவலமான பிறவியாக்கிவிட்டது இந்த மது/போதை. நாடு எங்கே செல்கிறது.? வருத்தமான விஷயம்.
Rate this:
Cancel
Rajan -  ( Posted via: Dinamalar Android App )
25-பிப்-202208:08:09 IST Report Abuse
Rajan மது வாங்க பணம் தராத தந்தையை மகன் அடித்துக் கொலை. வீட்டு வேலை செய்யச் சொன்ன தாயை மகள் அடித்துக் கொலை... காதலுக்கு தடை போட்ட தாயை மகள் அடித்துக் கொலை, கள்ளக்காதலை கண்டித்த மகளை தாய் அடித்துக் கொலை .... எங்கே போகிறது சமுதாயம்? பாசம் நேசம் என்ற உறவுகளுக்கு மதிப்பே இல்லையே.
Rate this:
Cancel
srinivasansundar - Pondicherry,இந்தியா
25-பிப்-202204:44:36 IST Report Abuse
srinivasansundar நீ உழைத்து சம்பாதித்து குடித்திருக்கலாமே. ம்ஹும்............... தந்தையின் அருமை இப்போது தெரியாதுடா உன் ஐம்பது ஆவது வயதில் தான் தெரியும் அது வரைக்கும் நீ உயிரோடு இருப்பாயா என்பது சந்தேகமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X