இது உங்கள் இடம்: கோட்டை விட்டு விட்டனரே அ.தி.மு.க.,வினர்!

Added : பிப் 25, 2022 | கருத்துகள் (42) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்பி.மணி, நெல்லையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், 90 சதவீதத்திற்கும் மேலான இடங்களில், தி.மு.க., வெற்றி வாகை சூடியுள்ளது. இடைத்தேர்தலிலோ, பொதுத்தேர்தலிலோ ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சி, அமோக வெற்றி பெறுவது வாடிக்கை. அப்படி வெற்றி பெற சில பல
ADMK, Local Body Election, EVM machine


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்


பி.மணி, நெல்லையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், 90 சதவீதத்திற்கும் மேலான இடங்களில், தி.மு.க., வெற்றி வாகை சூடியுள்ளது. இடைத்தேர்தலிலோ, பொதுத்தேர்தலிலோ ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சி, அமோக வெற்றி பெறுவது வாடிக்கை. அப்படி வெற்றி பெற சில பல தில்லுமுல்லுகளையும், தில்லாலங்கடிகளையும் கையாளுவது வழக்கம்.

ஓட்டுச்சீட்டு முறை இருந்த போது, ஓட்டுச்சாவடிக்குள் ஆளும் கட்சியினர் மொத்தமாக நுழைந்து, தங்கள் கட்சி வேட்பாளரின் சின்னத்தில் முத்திரை குத்தி, ஓட்டு பெட்டியில் திணிப்பது நடைபெறும்; மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், அதுபோல செய்ய இயலாது. அதனால், புது உத்தியை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், ஆளுங்கட்சி கையாண்டிருக்கிறது. அதுதான் கொரோனா தொற்றாளர்கள், மாலை, 5:00 முதல், 6:00 மணி வரை ஓட்டளிக்க அனுமதி அளித்த திட்டம்.

ஒரு மணி நேரத்தில், 500 ஓட்டுகள் வரை ஒரு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்ய இயலும். 'கொரோனா தொற்று குறைந்து விட்டது; ஒழிந்து விட்டது' என்று, 'கதை' அளந்து கொண்டிருந்த ஆட்சியாளர்கள், கொரோனா தொற்றுள்ளவர்கள் ஓட்டுகளை பதிவு செய்ய ஒரு மணி நேரம் அவகாசம் அளிப்பானேன்? ஒவ்வொரு வார்டிலும், 500க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்களா இருக்கின்றனர்?


latest tamil newsஅந்த ஒரு மணி நேர அவகாசத்தில் என்ன செய்ய வேண்டுமோ, அதை கன கச்சிதமாக, கர்ம சிரத்தையோடு செய்து முடித்துள்ளனர் ஆளும் கட்சியினர். அந்த கள்ள ஓட்டு போடும், தில்லுமுல்லுகளை, தில்லாலங்கடி வேலைகளை, ஓட்டுச்சாவடியில் பணியில் இருந்த அலுவலர்களும் அமைதியாக வேடிக்கை பார்த்துள்ளனர். தட்டிக்கேட்க வேண்டிய காவல் துறையினரும் வாய்மூடி மவுனியாக இருந்துள்ளனர். 'தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. ஆங்காங்கே ஒரு சில அசம்பாவிதங்களை தவிர, எல்லாம் நல்லபடியாக நடந்தது' என்று காவல்துறை உயர் அதிகாரி அறிக்கை விடுகிறார்; மாநில தேர்தல் ஆணையரும் அதை வழி மொழிகிறார்.

அதேநேரத்தில், கள்ள ஓட்டு பதிவு செய்தவரை, கையும் களவுமாக பிடித்து கொடுத்த, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, நல்ல காரியமும் நடந்தேறியுள்ளது. கள்ள ஓட்டு பதிவு விவகாரத்தில், 'மாஜி' அமைச்சருக்கே இந்தக் கதி என்றால், சாதாரண குடிமகனின் கதியை நினைத்து பாருங்கள். நமக்கேன் வம்பு என, ஒதுங்கி நின்று வேடிக்கை தான் பார்த்துள்ளனர். சென்ற ஆண்டு இறுதியில் நடந்த சட்டசபை தேர்தலின் போது, ஆட்சியில் இருந்த அ.தி.மு.க., இந்த ரகசியம் தெரியாமல் கோட்டை விட்டு விட்டது.

சட்டசபை தேர்தலின் போதும், கொரோனா தொற்று பரவல் இருந்தது. சொல்லப்போனால், இன்றைய நிலவரத்தை விட கலவரமாகவே இருந்தது. அப்போது, அந்த கொரோனா தொற்றாளர்களுக்காக, ஒரு மணி நேரம் அல்ல. இரண்டு மணி நேர அவகாசம் அளித்திருந்தால் கூட, யாரும் குற்றம் சொல்லி இருக்க மாட்டார்கள். அ.தி.மு.க.,வினர் நினைத்திருந்தால், கள்ள ஓட்டுகளை குவித்திருக்கலாம்; ஆட்சிக்கும் வந்திருக்கலாம். கோட்டை விட்டு விட்டனர் பாவம்!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
muthu - tirunelveli,இந்தியா
27-பிப்-202223:34:18 IST Report Abuse
muthu if DMK wins , it is by adopting wrong methods, if admk fails, admk dont know illegal voting methods How p.mani thinks this idea..even though all opposite party agents are looking the poll process
Rate this:
Cancel
25-பிப்-202217:11:42 IST Report Abuse
jeyaseelan jack martin அது தான் படிசவனுக்கும் கை நாட்டுக்கும் உள்ள வேறுபாடு
Rate this:
Cancel
Kadaparai Mani - chennai,இந்தியா
25-பிப்-202217:04:47 IST Report Abuse
Kadaparai Mani முதலில் கருத்து சொல்பவர்கள் 2011.உள்ளாட்சி தேர்தலில் திமுக தோல்வியை compare.செய்யுங்கள் .அப்போது புரியும் உள்ளாட்சி இல் ஆளும் கட்சி தான் வெல்லும் என்று புரியும் .ஒரே வித்தியாசம் திமுக தில்லுமுல்லு கொஞ்சம் ஓவர் .இன்னொரு பிரச்னை நடுநிலை நடுத்தர மக்களுக்கு உள்ளாட்சி தேர்தல் பிடிக்க வில்லை .அதில் அதிக ஒட்டு அதிமுகவிற்கு சென்னை இல் விழும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X