கோல்கட்டா,-'மேற்கு வங்க சட்டசபை, மார்ச் ௭ம் தேதி அதிகாலை 2:௦௦ மணிக்கு கூடும் என அறிவித்ததை, மதியம் 2:௦௦ மணிக்கு கூடும் என மாற்ற வேண்டும்' என்ற கோரிக்கையை கவர்னர் நிராகரித்து விட்டார்
![]()
|
.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, மாநில கவர்னர் ஜக்தீப் தன்கருக்கும், முதல்வர் மம்தாவுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.இந்நிலையில், கவர்னர் ஜக்தீப் தன்கர் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், 'வரலாற் றில் முதன்முறையாக மார்ச் ௭ம் தேதி அதிகாலை 2:௦௦ மணிக்கு சட்டசபை கூட உள்ளது. 'இது வழக்கத்துக்கு மாறானது என்றாலும், மாநில அமைச்சரவையின் முடிவு' என தெரிவித்துஇருந்தார். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கவர்னருக்கு மாநில தலைமை செயலர் திவேதி எழுதிய கடிதத்தில், 'சட்டசபை கூடும் நேரத்தை பிற்பகல் ௨:௦௦ மணி என்பதை தெரிவிக்க பயன்படுத்தப்படும் குறியீடு, எழுத்துப் பிழையால் அதிகாலை என்பதை தெரிவிக்க பயன்படுத்தப்படும் குறியீடாக மாறிவிட்டது.
![]()
|
'அதனால், சட்டசபை கூடும் நேரத்தை, அதிகாலை 2:00மணி என்பதை, பிற்பகல் 2:00 மணி என மாற்றி அறிவிக்க வேண்டும்' என கூறியிருந்தார்.ஆனால், இதை ஏற்க கவர்னர் ஜக்தீப் தன்கர் மறுத்துவிட்டார். அவர் வெளியிட்ட அறிக்கையில், 'சட்டசபை கூடுவது பற்றியும், கூடும் நேரம் பற்றியும், மாநில அமைச்சரவையின் பரிந்துரையைத் தான் கவர்னர் ஏற்க வேண்டும். தலைமை செயலர் சொல்வதை ஏற்கக் கூடாது. அதனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது' என கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement