அமாவாசையில் கவுன்சிலர் பதவியேற்பு; வளர்பிறையில் மேயர் தேர்தல்!| Dinamalar

அமாவாசையில் கவுன்சிலர் பதவியேற்பு; வளர்பிறையில் மேயர் தேர்தல்!

Updated : பிப் 26, 2022 | Added : பிப் 26, 2022 | கருத்துகள் (17) | |
திருப்பூர்: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள், அமாவாசை நாளில் பதவியேற்க உள்ளனர். மேயர், தலைவர் தேர்தலும் வளர்பிறை நாளில் நடக்கிறது. மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவர் என்பதால், கவுன்சிலர் பதவியேற்புக்கு இடைவெளி விடப்பட்டுள்ளது. கவுன்சிலர்கள் பதவியேற்பு வரும் 2ம் தேதி நடைபெறும்


திருப்பூர்: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள், அமாவாசை நாளில் பதவியேற்க உள்ளனர்.



latest tamil news




மேயர், தலைவர் தேர்தலும் வளர்பிறை நாளில் நடக்கிறது. மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவர் என்பதால், கவுன்சிலர் பதவியேற்புக்கு இடைவெளி விடப்பட்டுள்ளது.

கவுன்சிலர்கள் பதவியேற்பு வரும் 2ம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. வரும் 2ம் தேதி அமாவாசை நாளில் இப்பதவியேற்பு நிகழ்வும், 4ம் தேதி வளர்பிறை நாளில் மேயர் மற்றும் தலைவர் தேர்தலும் நடக்கவுள்ளது.


latest tamil news




ஓட்டு எண்ணிக்கை முடிந்து முடிவு அறிவிக்கப்பட்டு இரு நாள் கழிந்து அஷ்டமி மற்றும் நவமி திதியாக இருந்தது. அடுத்து சனி, ஞாயிறு விடுமுறையாகவும், மார்ச் முதல் தேதி செவ்வாய் கிழமை என்பதாலும் இந்த நாட்களில் கவுன்சிலர்கள் பதவியேற்புக்கு உகந்த தில்லை; வரும் 2ம்தேதி புதன்கிழமை மற்றும் அமாவாசை என்பதால் அன்றைய தினம் கவுன்சிலர் பதவியேற்புக்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X