114வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

Updated : பிப் 26, 2022 | Added : பிப் 26, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை: மத்திய அரசின் கலால் வரி குறைப்பால், தீபாவளிக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும்; டீசல் 10 ரூபாயும் குறைந்த நிலையில், கடந்த 114 நாட்களாக அவற்றின் விலை மாற்றப்படாமல் உள்ளது.தமிழகத்தில் மூன்று மாதங்களாக, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலைகளை மாற்றாமல் உள்ளன இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள்,

சென்னை: மத்திய அரசின் கலால் வரி குறைப்பால், தீபாவளிக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும்; டீசல் 10 ரூபாயும் குறைந்த நிலையில், கடந்த 114 நாட்களாக அவற்றின் விலை மாற்றப்படாமல் உள்ளது.



latest tamil news




தமிழகத்தில் மூன்று மாதங்களாக, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலைகளை மாற்றாமல் உள்ளன இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன.


latest tamil news


தீபாவளியை முன்னிட்டு, மத்திய அரசு நவ.,3 இரவில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்தது. இதனால், அடுத்த நாள் தீபாவளியன்று நாடு முழுதும் லிட்டர் பெட்ரோல் விலை ஐந்து ரூபாயும்; டீசல் விலை 10 ரூபாயும் சரிந்தது.

அன்று தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும்; டீசல், 91.43 ரூபாய்க்கும் விற்பனையாகின. இன்று (பிப்.,26) வரை 114 நாட்களாகியும், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. இது, வாகன ஓட்டிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
26-பிப்-202209:46:42 IST Report Abuse
J.Isaac மார்ச் 10 ஆம் தேதிக்கு பிறகுதான் தெரியும் .வண்டவாளம் , தண்டவாளம் ஏறும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X