சென்னை: அனைத்து நாடுகளிலும் உயர் பொறுப்புகளில் தமிழர்கள் உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில், புத்தாக்க திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
அனைத்து படிப்புகளும் தமிழக மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு. முன்பு பொறியியல் கல்வி வெறும் கனவாகவே இருந்தது. நீட் தேர்வு விலக்கு பெறுவதில் சட்ட போராட்டம் நடத்தும் நிலை உள்ளது.

நாட்டில் உள்ள சிறப்பான கல்லூரிகளில் 30 தமிழகத்தில் உள்ளது.தமிழக இளைஞர்கள் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் உயர் பொறுப்பில் உள்ளனர்.ஆய்வுகள், ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் இன்னும் அதிகரிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.