ஹிந்தியில் ஸ்டாலின் புத்தகம்

Updated : பிப் 27, 2022 | Added : பிப் 27, 2022 | கருத்துகள் (87) | |
Advertisement
'தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்திய பிரதமராகும் தகுதி படைத்தவர் என தி.மு.க.,வில் ஆளாளுக்கு பேசிக் கொண்டிருக்கின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக சில விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன' என டில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஸ்டாலின் எழுதிய, 'உங்களில் ஒருவன்' புத்தகம் நாளை சென்னையில் வெளியிடப்படுகிறது. இதை ஹிந்தியிலும் மொழிபெயர்த்து


'தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்திய பிரதமராகும் தகுதி படைத்தவர் என தி.மு.க.,வில் ஆளாளுக்கு பேசிக் கொண்டிருக்கின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக சில விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன' என டில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.latest tamil newsஸ்டாலின் எழுதிய, 'உங்களில் ஒருவன்' புத்தகம் நாளை சென்னையில் வெளியிடப்படுகிறது. இதை ஹிந்தியிலும் மொழிபெயர்த்து வெளியிட ஏற்பாடுகள் நடக்கிறதாம். ஸ்டாலின் மிசாவில் கைதானது, சென்னை மேயரானது, துணை முதல்வரானது என பல தகவல்கள் இந்த புத்தகத்தில் இருக்கிறதாம்.

இன்னொரு பக்கம் ஸ்டாலின் பற்றி ஹிந்தியில் சில, 'வீடியோ'க்களும் தயாராகிறதாம். இந்த 30 வினாடி வீடியோக்களில் சமூக நீதிக்கான ஸ்டாலினின் போராட்டம், 'நீட்' தேர்வை ரத்து செய்ய தி.மு.க., நடத்தும் போராட்டம் என பல விஷயங்கள் இடம் பெறும் என சொல்லப்படுகிறது.


latest tamil news
'இந்த குறும்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும். இதன் வாயிலாக வட மாநிலங்களில் ஸ்டாலின் யார் என்பது மக்களுக்கு தெரியவரும்' என தி.மு.க., தரப்பில் சொல்லப்படுகிறது.காங்., முன்னாள் தலைவர் ராகுலுக்கு போட்டியாக, ஸ்டாலினும் தேசிய தலைவராக வந்து விடுவார் போலிருக்கிறதே என்கிறது டில்லி அரசியல் வட்டாரம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (87)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா
06-மார்-202203:58:58 IST Report Abuse
Srivilliputtur S Ramesh அண்ணாதுரை கண்ட "இந்தி எதிர்ப்பு கொள்கையை" தீவிரமாக பின்பற்றுகிறார். "நாங்கள், இந்தியை எதிர்க்க வில்லை. இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம் என்பார் கருணாநிதி. ஆனால், ரெயில் நிலையம், தபால் நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை தார் பூசி அழித்தவர்கள் தான் இந்த தி.மு.க. வினர்.
Rate this:
Cancel
Akash - Herndon,யூ.எஸ்.ஏ
27-பிப்-202220:07:19 IST Report Abuse
Akash PTR for India. Stalin global level.
Rate this:
Cancel
27-பிப்-202219:11:16 IST Report Abuse
ஆரூர் ரங் பலர் வற்புறுத்தியும்😔 ராஜாஜி சுயசரிதை எழுத மறுத்ததற்கு காரணமே பல உண்மைகளை மறைக்க வேண்டிய கட்டாயம் இருக்கும் என்பதால்தான் . நெஞ்சுக்கு நீதி மாதிரி👺 உண்மை சிறிதும் கலக்காமல் எழுதியது போல் இருக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X