ஹிந்தியில் ஸ்டாலின் புத்தகம்| Dinamalar

ஹிந்தியில் ஸ்டாலின் புத்தகம்

Updated : பிப் 27, 2022 | Added : பிப் 27, 2022 | கருத்துகள் (87) | |
'தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்திய பிரதமராகும் தகுதி படைத்தவர் என தி.மு.க.,வில் ஆளாளுக்கு பேசிக் கொண்டிருக்கின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக சில விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன' என டில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஸ்டாலின் எழுதிய, 'உங்களில் ஒருவன்' புத்தகம் நாளை சென்னையில் வெளியிடப்படுகிறது. இதை ஹிந்தியிலும் மொழிபெயர்த்து


'தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்திய பிரதமராகும் தகுதி படைத்தவர் என தி.மு.க.,வில் ஆளாளுக்கு பேசிக் கொண்டிருக்கின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக சில விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன' என டில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.



latest tamil news



ஸ்டாலின் எழுதிய, 'உங்களில் ஒருவன்' புத்தகம் நாளை சென்னையில் வெளியிடப்படுகிறது. இதை ஹிந்தியிலும் மொழிபெயர்த்து வெளியிட ஏற்பாடுகள் நடக்கிறதாம். ஸ்டாலின் மிசாவில் கைதானது, சென்னை மேயரானது, துணை முதல்வரானது என பல தகவல்கள் இந்த புத்தகத்தில் இருக்கிறதாம்.

இன்னொரு பக்கம் ஸ்டாலின் பற்றி ஹிந்தியில் சில, 'வீடியோ'க்களும் தயாராகிறதாம். இந்த 30 வினாடி வீடியோக்களில் சமூக நீதிக்கான ஸ்டாலினின் போராட்டம், 'நீட்' தேர்வை ரத்து செய்ய தி.மு.க., நடத்தும் போராட்டம் என பல விஷயங்கள் இடம் பெறும் என சொல்லப்படுகிறது.


latest tamil news




'இந்த குறும்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும். இதன் வாயிலாக வட மாநிலங்களில் ஸ்டாலின் யார் என்பது மக்களுக்கு தெரியவரும்' என தி.மு.க., தரப்பில் சொல்லப்படுகிறது.காங்., முன்னாள் தலைவர் ராகுலுக்கு போட்டியாக, ஸ்டாலினும் தேசிய தலைவராக வந்து விடுவார் போலிருக்கிறதே என்கிறது டில்லி அரசியல் வட்டாரம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X