என் 'மார்க்கெட்' உயர்கிறது: நடிகர் ஜெய்

Added : பிப் 27, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
'சுப்பிரமணியபுரம்' படத்தில் லோக்கல் காதல் மன்னனாக வந்து 'கண்கள் இரண்டால்' என பாட்டு பாடி அசத்தி, சாக்லேட் பாயாக காதல் காட்சிகளில் கலக்கி... நடிப்பு மட்டுமல்ல இசையும் நான் தான்... என இசையமைப்பாளராகவும் வளர்ந்து வரும் நடிகர் ஜெய் மனம் திறக்கிறார்... உங்க நடிப்பில் வெளிவரக்கூடிய படங்கள் பற்றி சுசீந்திரன் இயக்கத்தில் 'குற்றம் குற்றமே', வெங்கட்பிரபு
என் 'மார்க்கெட்'  உயர்கிறது: நடிகர் ஜெய்

'சுப்பிரமணியபுரம்' படத்தில் லோக்கல் காதல் மன்னனாக வந்து 'கண்கள் இரண்டால்' என பாட்டு பாடி அசத்தி, சாக்லேட் பாயாக காதல் காட்சிகளில் கலக்கி... நடிப்பு மட்டுமல்ல இசையும் நான் தான்... என இசையமைப்பாளராகவும் வளர்ந்து வரும் நடிகர் ஜெய் மனம் திறக்கிறார்...


உங்க நடிப்பில் வெளிவரக்கூடிய படங்கள் பற்றி

சுசீந்திரன் இயக்கத்தில் 'குற்றம் குற்றமே', வெங்கட்பிரபு இயக்கத்தில் 'பார்ட்டி', கோபி நயினார் இயக்கத்தில் 'கருப்பன் நகரம்', பத்ரி இயக்கத்தில் 'பட்டாம்பூச்சி' சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படம், சசிகுமாருடன் நடிக்கும் ஒரு படம் என 10 படங்கள் வெளிவருகிறது.


உங்க மார்க்கெட் நிலவரம்

'பகவதி', 'சென்னை 28', 'சுப்ரமணியபுரம்'... மார்க்கெட் உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. என் சம்பளம் தாண்டி கதை, தயாரிப்பாளர்களுக்கு ஏற்ப சம்பளம் வாங்குகிறேன். வெற்றிக்காக போராடும் நிலையில் சம்பளத்தை விட கதைகள் தான் முக்கியம்.


ஒரு நடிகரா 'ஜெய்'யை மக்களிடம் சேர்த்த படங்கள்

'பகவதி', 'அவள் பெயர் தமிழரசி', 'சென்னை-28', 'சுப்பிரமணியபுரம்', 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி' என்னை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது. 'கலகலப்பு 2', போல் சில வெற்றி படங்களும் லிஸ்ட்டில் உள்ளன.நீங்கள் நடித்த வீரபாண்டியபுரம் படத்திற்கு இசையும்..


ஆமா... 'வீரபாண்டியபுரம்' படத்தில் நானே நடித்து இசையமைத்துள்ளேன். ஆனால் படத்துக்காக உடல் எடை குறைத்தது சண்டை காட்சிகளில் நடிக்கும் போது ஏற்பட்ட சம்பவங்கள் இரண்டு கெட்டப்களில் மாறி நடிச்சிருக்கேன். அதனால் தான் ரொம்ப நாளைக்கு பின்னாடி இசை வெளியீட்டு விழாவிற்கு வந்தேன்.இசை படித்து நீங்கள் இசை அமைப்பாளராக...


இசை படிக்கும் போது 'பகவதி' வாய்ப்பு வந்ததால் தொடர்ந்து படிக்கவில்லை. 'டிரிபிள்ஸ்' இயக்குனர் தான் ஒரு பாட்டு கேட்டு வாங்கினார். அதற்கு பின் தான் இசை அமைக்க முடியும் என நம்பிக்கை வந்தது. இனி கதை பிடித்தால் படங்களுக்கு இசையமைப்பேன்.உங்களுடன் நடித்த நடிகைகளில் திறமைசாலிகள் யார்


'வாமனன்' படத்தில் பிரியா ஆனந்த், 'சென்னை 28' விஜயலட்சுமி, 'சுப்பிரமணியபுரம்' சுவாதி, 'திருமணம் என்னும் நிக்கா' நஸ்ரியா திறமைசாலிகள். நயன்தாராவுடன் கிரியேட்டிவாக நடிக்க கற்றேன். 'எங்கேயும் எப்போதும்'ல் ஒரு பாய் பிரண்டு கிட்ட இயல்பாக பழகி நடித்த அஞ்சலியும் திறமைசாலி தான்.நீங்கள் இல்லாம 'மாநாடு' வச்சுட்டாரு வெங்கட்பிரபு


'மாநாடு' படப்பிடிப்பின் போது 'எண்ணித் துணிக' படத்தில் நடித்து கொண்டு இருந்தேன். அதனால் 'மாநாடு'ல் நடிக்க முடியல. எஸ்.ஜெ., சூர்யா கேரக்டர் கிடைத்திருந்தால் நல்லா நடிச்சிருப்பேன்.வில்லன் ரோல் ஆர்வம் வந்தது


நெகட்டிவ் ரோலில் நடிக்க ஆசை. சுந்தர் சி தயாரிப்பில் 'பட்டாம் பூச்சி'ல் நெகட்டிவ் ரோல் நடிச்சிருக்கேன். 2 ஆண்டு பயிற்சிக்கு பின் கார் ரேஸ் போனேன். இப்போ டாப் 6 வந்திருக்கேன். 2021ல் இருந்து ரேஸ் போயிட்டு இருக்கேன். இந்திய அளவில் ரேஸ்ல பங்கேற்பது என் கனவு.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
05-மார்-202211:48:20 IST Report Abuse
Girija இவன் சாக்லேட் பாய் ? கம்மர் கட் பாய் ......................
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X