மதுரை -மாற்றுத்திறனாளிகளுக்கான ரயில் பெட்டிகளை இணைக்க கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தினர்மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.மாநில செயலாளர் வில்சன் பேசுகையில், “கொரோனாவை காரணம் காட்டி இப்பெட்டிகள் இணைக்கப்படாததால் மாற்றுத்திறனாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதுபோல் அவர்களுக்கான சலுகை பயணச்சீட்டு வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது. நடைமேடைகளில் பேட்டரி வண்டிகளில் விதிமீறி அவர்களிடம் கட்டணம் வசூலிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.நிர்வாகிகள் பகத்சிங், நாகராஜன், குமாரவேல், முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.