அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம்: முதல்வர் ஸ்டாலின் விருப்பம்

Added : மார் 01, 2022 | கருத்துகள் (78) | |
Advertisement
சென்னை: ''மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் தரும் வகையில், இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள தன் வரலாற்று நுாலான, 'உங்களில் ஒருவன்' முதல் பாகம் வெளியீட்டு விழா, நேற்று சென்னை வர்த்தக மையத்தில் நடந்தது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல், நுாலை வெளியிட்டார்.
உங்களில்_ஒருவன்,MK Stalin, DMK

சென்னை: ''மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் தரும் வகையில், இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள தன் வரலாற்று நுாலான, 'உங்களில் ஒருவன்' முதல் பாகம் வெளியீட்டு விழா, நேற்று சென்னை வர்த்தக மையத்தில் நடந்தது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல், நுாலை வெளியிட்டார்.


latest tamil news


நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: எந்த பொறுப்பில் இருந்தாலும், உங்களில் ஒருவனாகத்தான் இருப்பேன். வாழ்நாள் முழுதும், உங்களில் ஒருவனாக செயல்படுவேன். நான் பிறந்தபோது குலக் கல்வியை எதிர்த்து போராடினோம். இன்று 'நீட்' தேர்வை எதிர்த்து போராடுகிறோம். பள்ளி மாணவனாக இருந்தபோது ஹிந்தியை எதிர்த்தோம்; இன்றும் எதிர்க்கிறோம்.

என் தத்துவத்திற்கு, 'திராவிட மாடல்' என்று பெயர். அதாவது திராவிடவியல் ஆட்சிமுறை. அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் என் கோட்பாடு. அனைத்து தேசிய இனங்களுக்கும், சம உரிமை வழங்கப்பட வேண்டும். அனைத்து மாநிலங்களும் அதிக அதிகாரத்துடன் சுயாட்சி கொண்டதாக இருக்க வேண்டும். மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்துடன் செயல்பட வேண்டும்.


latest tamil news



இந்த திராவிடவியல் கோட்பாட்டை, இந்தியா முழுமைக்கும் எடுத்து சொல்ல வேண்டும். ராகுல், திராவிடவியல் கோட்பாட்டை முழுமையாக உணர்ந்துள்ளார். இத்தகைய மாற்றத்தை, அனைத்து தேசிய தலைவர்களும் அடைய வேண்டும். மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் தரும் வகையில், இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட வேண்டும். இதற்கு அனைத்து கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும். மாநிலங்கள் அதிகாரமற்ற பகுதிகளாக மாறுவதை தடுத்தாக வேண்டும். இதற்கு, அனைத்து கட்சிகளும் இணைந்து பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barakat Ali - Medan,இந்தோனேசியா
02-மார்-202211:30:39 IST Report Abuse
Barakat Ali அரசியலமைப்புச் சட்டத்தில் அதிக திருத்தங்களை இதுகாறும் மேற்கொண்டது காங்கிரஸ் அப்படியும் மாநிலங்களுக்கு ஸ்டாலினோ, கலைஞரோ விரும்பும் அதிகாரம் அளிக்கப் படவில்லை திமுக தயவால் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடத்தியபோது இந்த அட்டைக்கத்தி வீரர்களுக்கு இந்த விஷயம் ஏன் நினைவுக்கு வரவில்லை? என்ன டீம்கா அல்லக்கைஸ் நேர்மையான பதில் உண்டா உங்களிடம்?
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
02-மார்-202211:23:51 IST Report Abuse
Barakat Ali "ராகுல், திராவிடவியல் கோட்பாட்டை முழுமையாக உணர்ந்துள்ளார். "பட்டாயா சுற்றுலாதான் திராவிட மாடல் என்றால் ஆம் ராகுல் அதை உணர்ந்துள்ளார் அணு அணுவாக அனுபவித்துள்ளார்
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
01-மார்-202218:46:21 IST Report Abuse
raja ரொம்ப நல்லவன்னு அவனே சொல்லுகிறான்... சுய புராணத்தில்.....
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
02-மார்-202214:01:20 IST Report Abuse
Barakat Ali... கேட்டாலும் அதையேதான் சொல்வாரா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X