சேலத்தில் நீதிபதி மீது கத்திக்குத்து: அலுவலக உதவியாளர் கைது

Updated : மார் 01, 2022 | Added : மார் 01, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
சேலம்: சேலத்தில் நீதிபதி பொன்.பாண்டியனை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற அலுவலக உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.சேலத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், 4வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் பொன்.பாண்டியன். அங்கு அலுவலக உதவியாளராக பணிபுரிந்த பிரகாஷ் என்பவர் கத்தியால் குத்தி கொலை முயற்சி செய்தார். இதனால், அவருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது.
judge, knife, சேலம், கத்திக்குத்து, நீதிபதி,

சேலம்: சேலத்தில் நீதிபதி பொன்.பாண்டியனை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற அலுவலக உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.



சேலத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், 4வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் பொன்.பாண்டியன். அங்கு அலுவலக உதவியாளராக பணிபுரிந்த பிரகாஷ் என்பவர் கத்தியால் குத்தி கொலை முயற்சி செய்தார். இதனால், அவருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் மற்றும் போலீசார் பிரகாஷை பிடித்தனர். தொடர்ந்து அவரை, அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேசன் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


latest tamil news


நீதிபதி மார்பில் குத்திய ஊழியர் சேலத்தில் பரபரப்பு

முதல் கட்ட விசாரணையில், பிரகாஷ்க்கு பல முறை பணியிட மாறுதல் வழங்கப்பட்டதாகவும், இதனால், ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கத்தியால் குத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்த நீதிபதி பொன்.பாண்டியன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (17)

மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
01-மார்-202219:25:23 IST Report Abuse
மலரின் மகள் அரசு ஊழியர்கள் குற்றமிழைத்தால் அவர்களுக்கான தண்டனை அதிகரிக்கப்பட வேண்டும். அரசு ஊழியர்களுக்கான பொறுப்புக்களும் சட்ட பாதுகாப்புகளும் அதிகம்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
01-மார்-202219:10:28 IST Report Abuse
D.Ambujavalli மன அழுத்தம் ஏற்படுமளவு அடிக்கடி மாற்றல், குடும்பத்திலும் நிம்மதியின்மை என்று உச்ச கட்டத்தில் இருந்திருப்பார் முதலில் அலுவலக ஊழியர்களுக்கு கவுன்சலிங் அளிக்கப்பட வேண்டும்
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
01-மார்-202218:57:43 IST Report Abuse
N Annamalai கண்டனத்துக்கு உரியது .கண்டிக்க தண்டிக்க தக்க செயல் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X