சேலம்: சேலத்தில் நீதிபதி பொன்.பாண்டியனை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற அலுவலக உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.
சேலத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், 4வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் பொன்.பாண்டியன். அங்கு அலுவலக உதவியாளராக பணிபுரிந்த பிரகாஷ் என்பவர் கத்தியால் குத்தி கொலை முயற்சி செய்தார். இதனால், அவருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் மற்றும் போலீசார் பிரகாஷை பிடித்தனர். தொடர்ந்து அவரை, அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேசன் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில், பிரகாஷ்க்கு பல முறை பணியிட மாறுதல் வழங்கப்பட்டதாகவும், இதனால், ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கத்தியால் குத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்த நீதிபதி பொன்.பாண்டியன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.