புதுடில்லி: உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து 6வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. அங்குள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக பிரதமர் மோடி உயர்மட்ட குழுவுடன் 3 முறை ஆலோசனை நடத்தினார். நேற்றிரவு (பிப்.,28) வரை உக்ரைனில் இருந்து 5 விமானங்கள் மூலமாக 1,156 பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தியர்களை மீட்க உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு 4 மத்திய அமைச்சர்களை அனுப்பி, மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். அதில், உக்ரைனுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பாகவும், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.